Home
News

ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? அளவுக்கு மீறி லக்கேஜ்.. இது தெரியாம போய் மாட்டிக்காதீங்க..

ரயில்களில் குறைந்த அளவில் லக்கேஜ்களை எடுத்துச் சென்றால் நல்லது. அதுவும் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை மீறி எடுத்துச் சென்றால் அபராதம் வசூலிக்கப்படும். இந்தியா முழுவதும் தினமும் பல லட்சம் மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதுவும் ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு மற்றும் நிறைய வசதிகள் இருப்பதால் தான் ரயில் பயணத்தை அதிக மக்கள் தேர்வு செய்கின்றனர்.

ரூ.21 கோடி அபராதம்:

அதேசமயம் ரயில்களில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும். இதனால் தான் பலர் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்றனர். அதேபோல் ரயில் பயணம் செய்யும் போது பயணிகள் எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணத்தின்போது குறிப்பிட்ட வரம்பு வரை எடையுள்ள சாமான்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.

ரயிலில் பயணிப்பவரா நீங்கள்?  அளவுக்கு மீறி லக்கேஜ்..

ஒருவேளை குறிப்பிட்ட எடையை விட சாமன்களை அதிகமாக இருந்தால் நீங்கள் அதிக எடைக்கும் ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய ரயில்வே (Indian Railways) இதற்கான புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.தற்போது informalnewz இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மேற்கு ரயில்வே டிக்கெட் இல்லாமல் மற்றும் முன்பதிவு செய்யாமல் எடுத்துச் செல்லப்பட்ட சாமான்களுக்கு ரூ.21 கோடி அபராதம் வசூல் செய்துள்ளது.

குறிப்பாக லக்கேஜ் விதிகளை மீறிய பயணிகளிடமிருந்து இவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து மட்டுமே ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் ரயில்வேயின் மூத்த வணிக அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முழு சோதனை நடைவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் டிக்கெட் சரிபார்ப்பு குழு பல சிறப்பு விசாரணை இயக்கங்களை நடத்தியது. இந்த இயக்கங்களின் விளைவாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.10 லட்சம் பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முன்பதிவு செய்யப்படாத சாமான்களை எடுத்துச் சென்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பெரிய அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பின்பு ஏசி உள்ளூர் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் நுழைவதைத் தடுக்க திடீர் டிக்கெட் சரிபார்ப்பு இயக்கத்தை இந்திய ரயில்வே நடத்தியது. இதன் விளைவாக 6000க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகப் பிடிபட்டுள்ளனர். பின்பு அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

லக்கேஜ் லிமிட்:

சமீபத்தில் timesofindia வெளியிட்ட தகவலின்படி, நீங்கள் ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்தால், 70 கிலோ வரை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். கூடுதல் எடைக்கு கட்டணம் உண்டு. வசதியின் அடிப்படையில் இது பிரீமியம் வகை.

அடுத்து ஏசி 2-டயர் கோச்சில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி. இதை விட அதிகமான லக்கேஜ் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் ஏசி 3-டயர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் லக்கேஜ் லிமிட் 40 கிலோ. அதிக லக்கேஜ் கொண்டு வர வேண்டுமென்றால் முன்பே புக் செய்யுங்கள். ரயில்களில் கூட்டத்தை குறைக்க இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜெனரல் அல்லது இரண்டாம் வகுப்பு பெட்டியில் 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். குறுகிய பயணத்திற்குச் சரியானது. நெரிசலான பெட்டியில் இந்த லிமிட் அவசியம். பின்பு ரயில்வே சில பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இந்த பொருட்களுடன் பிடிபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Railways luggage carrying rules: Lakhs of passengers fined: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X