ரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி கலக்கல்.!

சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் கூட உள்ளது.

|

ஐஆர்சிடிசி சார்பில் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதன்படி ரயில்களில் எப்படி உணவு தயாராகிறது என்பதை இணையத்தில் பயணிகள் நேரடியாக காண்பதற்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்.

ரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி.!

மேலும் இந்த புதிய வசதி பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என அமைச்சர் பியுஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார், மேலும் இதற்கு வேண்டி ரயில்களில் உள்ள சமையல் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அமைச்சகம் முடிவுசெய்துள்ளது, குறிப்பாக ரயில்வே உணவுத் துறைக்கு சொந்தமாக 200 சமையலறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி

சிசிடிவி

முதலில் 16 சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் சமைக்கப்படும் உணவுகளைப் பயனர்கள் நேரடியாக பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை,ஜான்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் மட்டும் தற்சமயம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

 விஷன் கம்ப்யூட்டிங்;

விஷன் கம்ப்யூட்டிங்;

குறிப்பாக சமைக்கப்படுவதை ஐஆர்சிடிசி இணையதளத்தின் வழியே பயனர்கள் பார்க்கமுடியும், பின்பு இதை விஷன் கம்ப்யூட்டிங் என்ற முறையில் செயல்படுத்தபடும் என்று கூறியுள்ளது ஐஆர்சிடிசி அமைப்பு.

புகார்:

புகார்:

சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் கூட உள்ளது, மேலும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனே கொண்டு செல்லப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒப்பந்ததாரர் டவடிக்கை எடுக்காவிட்டால் ஐஆர்சிடிசி-க்கு புகார் செல்லும் வசதி கூட வந்துவிட்டது.

செயலிகள்

செயலிகள்

ரயில்வே பயனிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களை தெரிவிக்க இரண்டு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த செயலிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு செயலிகளை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பியூஸ் கோயல்:

பியூஸ் கோயல்:

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது என்னவென்றால், ரயில் பயணிகள் தங்கள் புகார்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக பதிவு செய்ய வசதியாக Rail MADAD என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உணவுகள்

உணவுகள்

மேலும் 'menu on rails' என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால்ரயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் உணவுகளை ஆர்டர் செய்ய இந்த ''menu on rails'' உதுவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Railways to live stream cooking in IRCTC rail kitchens : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X