Home
News

RailOne செயலி இருக்கா? ரயில் பயணிகளுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு: இந்த தவறை செய்தால் அபராதம் உறுதி!

இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் Rail One செயலி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது இந்திய ரயில்வேயின் புதிய RailOne செயலி மூலம் பெறப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) டிஜிட்டல் டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் டிக்கெட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுடன், போலி டிக்கெட் மோசடிகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RailOne செயலி இருக்கா? ரயில் பயணிகளுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

RailOne செயலி மூலம் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது டிக்கெட்டை மொபைலில் உள்ள செயலியிலேயே நேரடியாகத் திறந்து காட்ட வேண்டும். செயலியில் காண்பிக்கப்படும் டிஜிட்டல் டிக்கெட் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவை ஏற்றுக்கொள்ளப்படாது?
RailOne செயலி மூலம் பெறப்பட்ட டிக்கெட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்கள், PDF வடிவங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்ட டிக்கெட் பார்வேர்டுகள் எக்காரணம் கொண்டும் செல்லுபடியாகும் பயணச்சீட்டாக ஏற்றுக்கொள்ளப்படாது என இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

டிக்கெட் பரிசோதகரான (TTE) டிக்கெட்டைச் சரிபார்க்கும் போது, பயணிகள் தங்களது மொபைலில் உள்ள RailOne செயலியை நேரடியாகத் திறந்து டிஜிட்டல் டிக்கெட்டைக் காண்பிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஸ்கிரீன்ஷாட், PDF அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட டிக்கெட்டை காட்டினால், அது செல்லுபடியாகும் பயணச்சீட்டாக ஏற்றுக்கொள்ளப்படாது.

இதுபோன்ற சூழலில், சம்பந்தப்பட்ட பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். இதையடுத்து, இந்திய ரயில்வே விதிமுறைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், தேவையான பிற நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.

அதாவது ஒரே டிக்கெட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலருக்குப் பகிர்ந்து, ஒரே கட்டணத்தில் பல நபர்கள் பயணம் செய்யும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, டிக்கெட் சரிபார்ப்பு நடைமுறையிலும் சிக்கல்கள் உருவாகின்றன.

இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், டிஜிட்டல் டிக்கெட் முறையின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், RailOne செயலியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் டிக்கெட்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற புதிய விதியை ரயில்வே அமல்படுத்தியுள்ளது.

RailOne செயலி இருக்கா? ரயில் பயணிகளுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்த Rail One செயலி இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் பயனுள்ள மொபைல் செயலியாகும். இதன் மூலம் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், ரயிலின் தற்போதைய இயக்க நிலை (Running Status), பிளாட்பார்ம் எண், பெட்டி (Coach) விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். இதனுடன், பல்வேறு ரயில்வே தொடர்பான சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வசதி உள்ளது.

Rail One செயலியின் மிகப்பெரிய சிறப்பு, ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியத்தை நீக்குவதுதான். பயணிகள் தங்கள் மொபைல் போன் மூலமாகவே சில நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தலாம். எளிய பயன்பாட்டு முறையால் அனைவரும் சிரமமின்றி இந்தச் செயலியைப் பயன்படுத்த முடிகிறது. எனவே, வேகமான, வசதியான மற்றும் நம்பகமான ரயில் பயண அனுபவத்தை வழங்கும் சிறந்த செயலியாக Rail One உள்ளது.

Best Mobiles in India

English summary
RailOne Users Alert: Screenshots, PDFs and WhatsApp Copies Will Not Be Accepted
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X