Home
News

இந்திய ரயில்வே சர்ப்ரைஸ்.. எக்ஸ்பிரஸ் ரயிலில் ATM வசதி.. சோதனை வெற்றி.. இதோ முழு விவரம்..

இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் (Panchavati Express) ரயிலில் ஏடிஎம் (ATM) இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் ஏடிஎம்

பொதுவாக ஏடிஎம் இயந்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது முதல் முறையாக மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. அதுவும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே சர்ப்ரைஸ்.. எக்ஸ்பிரஸ் ரயிலில் ATM வசதி.. சோதனை வெற்றி!

குறிப்பாகப் பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் தான் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏடிஎம் இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது என்னவென்றால், சோதனை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் மட்டும் சிக்னல் பிரச்சனை இருந்தது. ஆனாலும் மக்கள் இனி ரயில் ஏடிம்-இல் பணம் எடுக்க முடியும். பின்பு ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாட்டைக் கண்காணிப்போம் என்று தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் இதுகுறித்து தெரிவித்தது என்னவென்றால். இது ஒரு நல்ல முயற்சி, அவசர தேவைக்குப் பணம் எடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.

கவுண்டரில் வாங்கும் டிக்கெட்

அதேபோல் சமீபத்தில் ரயில் பயணிகள் கவுண்டரில் வாங்கும் டிக்கெட்டை (Railway counter tickets) கேன்சல் செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டது இது குறித்த தகவல்களையும் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

கவுண்டரில் வாங்கும் ரயில் டிக்கெட்டை ஐஆர்சிடிசியின் வலைதளம் (IRCTC website) மூலமாகவும் எளிய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து ரத்து செய்யலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) தெரிவித்தார். ஆனால் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான கட்டணத்தை முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்று தான் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

டிக்கெட் கவுண்டரில் காத்திருப்பு பட்டியல் பயணச்சீட்டை வாங்கியவர்கள் இருக்கை உறுதியாகாத நிலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுண்டருக்கு சென்று ரத்து வேண்டிய நிலை உள்ளது. மேலும் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி (BJP MP Medha Vishram Kulkarni) எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால், ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து ரத்து செய்யலாம் என தெரிவித்தார். பின்பு ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Best Mobiles in India

English summary
Indian Railways installs first ATM on Mumbai Panchavati Express: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X