ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

|

விமானம் போன்ற வேகத்தில் பயணிக்க உதவும் குறைந்த அழுத்த குழாய்களில் காந்த லெவிட்டேஷனை பயன்படுத்தும் தொழில்நுட்பமே ஹைப்பர்லூக் ஆகும். உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பை உருவாக்க இந்திய ரயில்வே அமைச்சகம் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்திருக்கிறது. ரயில்வே அமைச்சகம் மெட்ராஸ் ஐஐடியுடன் இணைந்து உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பை உருவாக்குவதன் மூலம் முதன்மையான நிறுவனத்தில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களுக்கான சிறந்த மையத்தை அமைக்கவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் முன்னோக்க நடவடிக்கை

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் முன்னோக்க நடவடிக்கை

2017 ஆம் ஆண்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அப்போது இருந்தே இந்தியா இந்த திட்டத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்து முன்னோக்கி வருகிறது. இதையடுத்து ரயில்வே அமைச்சகத்திற்கும் அமெரிக்காவை சேர்ந்த ஹைப்பர்லூப் ஒன் என்ற நிறுவனத்துக்கும் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நாள் வரை இந்த பேச்சுவார்த்தையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

அதிவேகத்தில் ஹைப்பர்லூப் பயணம்

அதிவேகத்தில் ஹைப்பர்லூப் பயணம்

விமானம் போன்ற வேகத்தில் மக்களையும் பொருட்களையும் கொண்டு செல்ல ஹைப்பர்லூப் பயன்படுத்தப்பட இருக்கிறது. குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்த லெவிட்டேஷன் எனப்படும் காந்தத்தின் இழுக்கும் சக்தியை பயன்படுத்தி அதிவேகத்தில் ஹைப்பர்லூப் செயல்படும். குறைந்த ஆற்றல் மட்டுமே தேவைப்படும் இந்த திட்டத்தில் தொழில்நுட்பம் இந்தியாவை கார்பன் நடுநிலையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைப்பர்லூப் போக்குவரத்து பயன்படுத்தி நாட்டின் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே முயற்சித்து வருகிறது.

ஐஐடி மெட்ராஸால் உருவாக்கப்பட்ட

ஐஐடி மெட்ராஸால் உருவாக்கப்பட்ட "அவிஷ்கர் ஹைப்பர்லூப்"

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸால் உருவாக்கப்பட்ட "அவிஷ்கர் ஹைப்பர்லூப்" என்ற 70 மாணவர்களை கொண்ட குழுவானது, ஹைப்பர்லூப் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தல் மற்றும் சிக்கனமான பொறியியல் கருத்துகளை பயன்படுத்துகிறது என ரயில்வே அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பின் மேம்பாட்டிற்காக சென்னை ஐஐடி உடன் இந்தியன் ரயில்வே இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்த சென்னை ரயில்வே

ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்த சென்னை ரயில்வே

உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பின் மேம்பாட்டிற்காக ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து ஐஐடி மெட்ராஸில் "ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களுக்கான சிறந்த மையம்" அமைக்கப்படும் என ரயில்வே தெரிவித்திருக்கிறது. ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து இந்தியன் ரயில்வே செயல்பட இருக்கிறது. அதேபோல் இந்த அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழுவானது SpaceX Hyperloop Pod Competition 2019 எனப்படும் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் உலகளவில் டாப்-10 இடத்தை பிடித்தது. அதேபோல் அவிஷ்கர் ஹைப்பர்லூப் என்ற மாணவர் குழு ஐரோப்பிய ஹைப்பர்லூப் வீக்-2021 போட்டியல் மிகவும் அளவிடக்கூடிய வடிவமைப்பு விருதை வென்றது.

ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவி

ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவி

இந்த குழுவானது மார்ச் 2022-ல் இந்தியன் ரயில்வே உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தது. ஐஐடி மெட்ராஸ் தனது டிஸ்கவரி வளாகத்தில் காண்டாக்ட்லெஸ் பாட் முன்மாதிரி மற்றும் முதல்வகை ஹைப்பல்ரூப் சோதனை வசதியை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகத்தை அணுகியது. இதையடுத்து இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியை கோரியிருக்கிறது. ஐஐடி மெட்ராஸ் தெரிவித்த தகவலின்படி, திட்டத்துக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.8.34 கோடி ஆகும் என தெரிவித்துள்ளது.

விர்ஜின் ஹைப்பர்லூப் வசதி

ஐஐடி மெட்ராஸ்-ல் தற்போதுள்ள சிஆர்ஆர் உடன் ஐந்து திட்டங்கள் முன்னேற்றத்தில் இருக்கின்றன. இந்த திட்டத்தில் 500 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் விட்டம் குழாய் கொண்ட ஹைப்பர்லூப் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த குழாய் செயல்பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள விர்ஜின் ஹைப்பர்லூப் வசதிக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான செலவில் அதை கணிசமாக மிஞ்சும் என ரயில்வே அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பம்

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பம்

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பத்தின் படி, மேம்பாலம் அமைத்து அதற்கு மேல் காற்றில்லா பெரிய குழாய் உருவாக்கி, அந்த காற்றில்லா குழாய்க்குள் இருக்கைகளுடன் கூடிய 'டியூப்' வடிவ உருளை பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளை வைத்து, காந்த விசையால் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் அந்தரத்தில் மிதந்தபடி பயணிக்கும் ஹைப்பர் லூப் ரயிலை இவர் உருவாக்கியுள்ளார். அதிவேக நில வழி பயணமாக இந்த ஹைப்பர் லூப் செயல்படுகிறது.

Best Mobiles in India

English summary
Indian Railways, IIT Madras Collaborate to india Hyperloop Project: Minstry of Railways

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X