Home
News

இனி ரயில் பயணிகளுக்கு சிரமம் இருக்காது.. WhatsApp மூலம் உடனே தீர்வு.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் உள்ள மக்கள் பேருந்து, விமானம் போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக கட்டணம் குறைவு மற்றும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் செல்ல முடியும் என்பதால் தான் ரயில் பயணத்தை அதிக மக்கள் தேர்வு செய்கின்றனர். அதேபோல் இந்திய ரயில்வே (Indian Railway) அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய வசதியைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

அதேபோல் இந்திய ரயில்வே தற்போது பெரிய ஏற்பாட்டை பயணிகளுக்காகச் செய்து வருகிறது. குறிப்பாக இது ரயில் பயணத்தை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது. அதாவது ரயிலில் பயணிகள் சந்திக்கும் எந்தவொரு சிரமத்திற்கும் விரைவான தீர்வை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இந்திய ரயில்வே விரைவில் ஒரு வாட்ஸ்அப் எண்ணை (Whatsapp Number) வெளியிட உள்ளது. அதில் பயணிகள் தங்களது புகார்களைப் பதிவுசெய்து உடனே தீர்வு பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இனி ரயில் பயணிகளுக்கு சிரமம் இருக்காது.. WhatsApp மூலம் உடனே தீர்வு..

குறிப்பாக ரயில் பயணம் செய்யும் மக்களுக்குத் தான் இந்த வாட்ஸ்அப் எண் சேவை கொண்டுவரப்படுகிறது. இது எந்த சூழ்நிலையிலும் பயணிகளுக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்திய ரயில்வே இந்த வாட்ஸ்அப் எண்ணை வெளியிடும் என்றும், இதன் மூலம் பயணிகள் தங்கள் புகார்களைப் பதிவு செய்து உடனடியாக உதவி கேட்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உதவி கிடைக்கும் வரை இந்த வாட்ஸ்அப் எண்ணில் சேட் மூலம் ஒவ்வொரு அப்டேட்டையும் பயணிகள் பார்க்க முடியும்.

ரயில்வே அமைப்பு வழங்க இருக்கும் வாட்ஸ்அப் எண்ணில் ஏதேனும் உதவி கேட்டால், முதலில் உங்களுக்கு AI மூலம் செய்தி வரும். அதில் உங்கள் பிரச்சனை தொடர்பான கூடுதல் தகவல்கள் கேட்கப்படும். பின்பு முழு விஷயங்களையும் பகிர்ந்த பிறகு சிறிது நேரத்திலேயே ஒரு ரயில்வே அதிகாரி உங்கள் பிரச்சனையை உடனடியாக தீர்க்க உங்களை அழைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மே 1-ம் தேதி இந்திய ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளின் விதிகளை மாற்றியது. அதன்படி காத்திருப்பு டிக்கெட்டுகள் (waiting list tickets) உள்ள பயணிகள் இனிமேல் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. ஒருவேளை இனி யாரிடமாவது காத்திருப்பு டிக்கெட் இருந்தால், அவர்கள் பொது வகுப்பு பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் டிக்கெட் கவுண்டரில் இருந்து காத்திருப்பு டிக்கெட்டுகளை எடுத்து ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது இந்திய ரயில்வே அமைப்பு. எனவே இப்போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்வது முழுமையாகத் தடை செய்யப்படும். அதேசமயம் எந்தவொரு பயணிக்கும் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட் இருப்பது கண்டறியப்பட்டால் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது பொது பெட்டிக்கு அனுப்பலாம்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் பயணிக்கும் மக்களின் வசதிக்காகத் தான் இந்த விதிமுறை உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதுவும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் தங்கள் பயணத்தில் போது காத்திருப்பு டிக்கெட்டுகளை கொண்ட பயணிகளால் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று இந்திய ரயில்வே அமைப்பு கூறியுள்ளது.

அதுவும் சில சமயங்களில் காத்திருப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகளின் இருக்கைகளில் அமர முயற்சிக்கின்றனர். இது அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சிரமத்தைப் போக்கத் தான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாராவது காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் ரயில்களில் பயணம் செய்தால் கவனமாக இருக்க வேண்டும்.

.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Railways has arranged for passengers to register complaints through a WhatsApp number
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X