Home
News

ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. அடுத்த மாதம் முதல் இந்த ஒரு ஆப் போதும்.. எல்லாமே கிடைக்கும்.. எப்படி?

பேருந்து, விமானங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ரயில்வே அமைப்பும் மக்களுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்கிறது. இந்நிலையில் சூப்பர் அப்ளிகேஷன் ஒன்றைப் பயணிகள் சேவைகளுக்காக வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே (Indian Railways) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சென்டர் ஃபார் ரயில்வே இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (Centre for Railway Information Systems) மூலம் ஒரு உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் ஆப், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனுடன் (IRCTC) ஒருங்கிணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. வருகிறது சூப்பர் ஆப்..

குறிப்பாக இந்த சூப்பர் ஆப் (Super App) மூலம் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். அதேபோல் டிக்கெட் ரத்து செய்தால் அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும்ப பெற முடியும். மேலும் பி.என்.ஆர். சரிபார்த்தல்,ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல்,உணவு ஆர்டர் போன்ற பல்வேறு சேவைகளை இந்த சூப்பர் ஆப் மூலம் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி (IRCTC) ரயில் கனெக்ட், உணவு டெலிவரிக்கு IRCTC eCatering, புகார்களுக்கு ரயில் மதத், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு UTS மற்றும் ரயில் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம் போன்ற பல ஆப்ஸ்களை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த புதிய சூப்பர் ஆப் வந்தால் மேலே கூறிய அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான ஆப் டவுன்லோட்களுடன் ஐஆர்சிடிசி-இன் ரயில் கனெக்ட் முன்பதிவு செய்வதற்கு மிகவும் பிரபலமான தளமாக உள்ளது. குறிப்பாக இந்திய ரயில்வே புதிய சூப்பர் ஆப்பை அறிமுகம் செய்து அதன் சேவைகள் மற்றும் வருவாயை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போதைய சூழலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஒரு ஆப், பிற சேவைகளைப் பெறுவதற்கு ஒரு ஆப் என பல்வேறு ஆப்களைப் பயன்படுத்துவது என பயணிகளுக்குச் சற்று சிக்கலாக இருக்கிறது. எனவே தான் இந்த சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு சூப்பர் அப்ளிகேஷனை வரும் டிசம்பர் மாதம் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. வருகிறது சூப்பர் ஆப்..

ஏற்கனவே வெளியான CNBC-TV18 அறிக்கையின்படி சரக்கு வாடிக்கையாளர்களும் இந்த சூப்பர் ஆப்-ஐ பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இந்த சூப்பர் ஆப் வசதியில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சூப்பர் ஆப் மூலம் அனைத்து ரயில் சேவைகளும் பெறமுடியும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. அதேபோல் இந்தியன் ரயில்வே (indian railway) அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு சேவையும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Indian Railways is going to launch the Super app this December: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X