அன்ரிசர்வ்டு ரயில் டிக்கெட்டை போனில் காட்டினால் செல்லாதா? இந்திய ரயில்வே கொடுத்த விளக்கம் இதுதான்!
இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்ய நினைக்கும் மக்கள் பேருந்து, விமானம் போன்றவற்றைத் தேர்வு செய்வதில்லை. அதாவது ரயிலில் பயணம் செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பாதுகாப்பு, குறைந்த விலை டிக்கெட் மற்றும் விரைவாக நாம் செல்ல வேண்டிய இடத்திற்குப் போக முடியும் என்பதால் ரயில் பயணத்தை அதிக மக்கள் தேர்வு செய்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே சென்று ரயில் நிலையத்தில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இந்த நிலைமை இல்லை. மொபைல் போனில் உள்ள செயலிகள் மூலம் விரைவாக டிக்கெட் பெற முடியும்.

அதாவது மொபைல் போனில் ஐஆர்சிடிசி, யுடிஎஸ் போன்ற செயலிகள் மூலம் எளிமையாக ரயில் டிக்கெட் வாங்கிவிட முடியும். அதுவும் கைகளில் டிக்கெட் கொண்ட செல்ல வேண்டிய நிலைமையும் இல்லை. மொபைல் போனில் டிக்கெட்டை காட்டினால் போதும். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே, ரயில் பயணிகள் டிக்கெட்டை கட்டாயம் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் பரவியது.
அதுவும் அன்ரிசர்வ்டு டிக்கெட் அதாவது முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருக்கக் கூடிய பயணிகள் கண்டிப்பாக கைகளில் அச்சிடப்பட்ட டிக்கெட்டை கொண்டுவர வேண்டும் என சில ஊடங்களில் தகவல் வெளியானது. மேலும் போனில் அன்ரிசர்வ்டு டிக்கெட் காட்டினால் செல்லாது என்றும், அச்சிடப்பட்ட டிக்கெட் கொண்டுவர வேண்டும் என செய்திகள் வெளிவந்தது.
குறிப்பாக டிஜிட்டல் டிக்கெட் மோசடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்படும் முறையில் இந்திய ரயில்வே துறை இந்த புதிய விதியை கொண்டுவந்தது என்றும் போனில் காட்டப்படும் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என தகவல் பரவியது.
இதுதவிர யுடிஎஸ் செயலி மற்றும் ATVM இயந்திரங்கள் அல்லது டிக்கெட் கவுண்டர்களில் பெறப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் அச்சிடப்பட்ட நகல் பயணிகள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த செய்தி லட்சக்கணக்கான ரயில் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய ரயில்வே விளக்கம்
இந்நிலையில் ஆன்லைனில் பரவிய அந்த தகவல்களுக்கு இந்திய ரயில்வே (Indian Railways) விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த முறையில் பதிவு செய்திருந்தாலும் அதை பிரிண்ட் அவுட்டாக எடுத்திருந்தால் அதனை பிரிண்ட் அவுட் முறையில் காட்டலாம். அதே நீங்கள் டிக்கெட்டை டிஜிட்டல் முறையில் பெற்றிருந்தால், பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை நீங்கள் மொபைல் போனிலேயே காண்பிக்கலாம் என தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே. குறிப்பாக இது டிக்கெட்டை சரி பார்ப்பதற்கு மட்டுமே தேவை எனத் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அதேபோல் அன்ரிசர்வ்டு டிக்கெட் வைத்திருக்கக்கூடிய பயனர்கள் கட்டாயம் அதனை பிரிண்ட் அவுட் முறையில் கொண்டுவர வேண்டும் என எந்தவொரு புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது எனவும் இந்திய ரயில்வே அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








