710 ரயில் நிலையங்களில் கலக்கும் அதிவேக இலவச வைஃபை வசதி: ரெயில்-ஒயர்.!
ரயில் நிலையங்களில் எப்போதும் வழங்கப்படும் காகித டிக்கெட்-களை காகிதம் இல்லாமல் புதியவகையிலாக பயண சீட்டுக்களை அறிமுகம் செய்ய ரயில்வே அமைப்பு உறுதி தெரிவித்துள்ளது.
தற்சமயம் ரயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி இந்தியாவில் இருக்கம் சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச வைஃபை வசதியை பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாடுமுழுவதும் சுமார் 710 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என முன்னதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார், மேலும டெல்லியில் நடைபெற்ற ஸ்மார்ட் ரயில்வே கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், 'தகவல் தொழில்நுட்பத்தின் நவீன அம்சங்களை பயணிகளுக்கு கிடைக்கச் செய்வதில் ரயில்வே தற்சமயம் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

பியுஷ் கோயல்
மேலும் ரயில்களின் நேரத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறனார் பியுஷ் கோயல், அதன்படி கடந்த ஏப்ரல் முதல் இப்போது வரை ரயில்களின் குறித்த நேர இயக்கம் 74 சதவீதம் வரை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜிபிஎஸ் கருவி
பின்பு ரயில் இன்ஜின்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக அறிய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக 6000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி கொண்டுவரப்படும் பியுஷ் கோயல் கூறினார்.

புதியவகையிலாக பயண சீட்டுக்கள்
ரயில் நிலையங்களில் எப்போதும் வழங்கப்படும் காகித டிக்கெட்-களை காகிதம் இல்லாமல் புதியவகையிலாக பயண சீட்டுக்களை அறிமுகம் செய்ய ரயில்வே அமைப்பு உறுதி தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு வேண்டி புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வைஃபை
இந்தியாவில் உள்ள 710ரயில் நிலையங்களில் இனி இலவச வைஃபை பெற முடியும் என பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார், அதன்படி முதலில் மிகவும் பரபரப்பான 100 ரயில் நிலையங்களில் இந்த வைஃபை சேவை கொடுக்கப்பட்டுள்ளது, பின்னர்
நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் 300 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது.

ரெயில்-ஒயர்
ரெயில்-ஒயர் (Railwire) என்ற பெயரில் குறிப்பிட்ட ரயலி நிலையங்களில் கிடைக்கப் பெறும் இந்த வைஃபை ஒரு பயனருக்கு சுமார் 30 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்தக் கொள்ள அனுமதிக்கும். குறிப்பாக கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு அதிவேக இணையசேவையை எடுத்துச் செல்வது என்பது ஒரு மகத்தான பயணமாக இருந்தது, இதில் அவ்வளவு சாவல்கள் நிறைந்திருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications