தீயாய் வந்த உத்தரவு.. ஏப்ரல் 1 முதல் புதிய ரயில் டிக்கெட் கட்டண முறை.. இனி ரொக்கமா காசு வேண்டாம்.. ஸ்பீட் பே..
இந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில் டிக்கெட்களை பெரும் கட்டண முறையில் சில மேம்படுத்தல்களை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் UPI மூலம் டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இந்திய ரயில்வே (IRCTC) தனது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பயண விதிகளில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதேபோல், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல புதிய மாற்றங்களையும், மேம்படுத்தல்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப்போது மற்றொரு முக்கியமான அறிவிப்பை இந்திய ரயில்வே இப்போது வெளியிட்டுள்ளது.

ரயில் டிக்கெட் கட்டண முறையில் மாற்றம்:
ரயில் நிலையங்களில் பயண டிக்கெட்களை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இன்னும் பல டிக்கெட் கவுண்டர்களின் நீடித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முக்கியமான பெரிய ரயில் நிலையங்களில் பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை பெற்ற பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சரியான சில்லறையை வழங்கி டிக்கெட் பெறுவது மற்றொரு சிக்கலாக இருக்கிறது.
இந்த சிக்கல்களை எல்லாம் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் இனி QR ஸ்கேன் மூலமும், UPI பேமெண்ட்ஸ் ஆப்ஸ் மூலமாகவும் கட்டணம் செலுத்தும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய கட்டண முறை வரும் ஏப்ரல் 1, 2024 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு UPI மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்திருந்தது. இப்போது, பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கும் UPI மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்கும் டிஜிட்டல் பேமெண்ட் முறையை இப்போது அனுமதிக்கப்போகிறது என்று கூறப்பட்டுள்ளது.

QR அல்லது UPI மூலம் இனி ரயில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்:
பொது வகுப்பு பயணிகள், அதாவது அண்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்களில் பயணிக்கும் பயணிகளின் பயண சீட்டு இனி QR அல்லது UPI கட்டண முறைப்படி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இனி ரொக்கமாக காசு கொடுத்து டிக்கெட் எடுக்க முடியாதா என்று சிலருக்கு சந்தேகம் எழுந்திருக்கும். இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின் படி, பயணிகள் வழக்கம் போல் ரொக்கமாக பணத்தை வழங்கியும் டிக்கெட்டை பெறலாம்.
சில்லரை தட்டுப்பாடு மற்றும் சரியான கட்டணத்தை உடனுக்குடன் வழங்கி நேரத்தை மிச்சப்படுத்த இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறையை இந்திய ரயில்வே அமல்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. UPI பேமெண்ட் என்று கூறுகையில், இந்திய ரயில்வே இப்போது கூகுள் பே (Google Pay) மற்றும் பேடியம் (Paytm) ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுன்டர்களில் ஆன்லைன் டிக்கெட் வசதிகளை ரயில்வே வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் இந்த நடவடிக்கை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது என்று இந்திய ரயில்வே IRCTC அறிவித்துள்ளது. இந்த தகவல் விரைந்து பொதுமக்களிடம் சென்றடைய பதிவை விரைவாக பகிருங்கள்.


Click it and Unblock the Notifications








