இந்திய ரயில்வேயின் புதிய ஆப் வெளியாகிடுச்சு, இது எதுக்கு? நீங்களே பாருங்க!

By Meganathan
|

இந்திய ரயில்வே ததேசிய ரயில் விசாரனை மையத்தை (National Train Enquiry System) NTES என்ற அபப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. ஆன்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும் இந்த செயளியில் பயனாளிகள் ரயில் நேரங்களை அறிந்துகொள்ள முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயளியில் எண்ணற்ற தகவல்கள் இருப்பதோடு உங்களின் ரயில் பயனத்தை எளிமையாக்கும்.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்திய ரயில்வேயின் புதிய ஆப் வெளியாகிடுச்சு, இது எதுக்கு?

ஸ்பாட் யுவர் ட்ரெயின் (Spot Your Train) தான் இந்த செயளியின் முக்கிய அம்சம், இது அனைத்து ரயில்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிப்பதுடன், அதன் நேரத்தையும் தெரிவிக்கும். மேலும் குறிப்பிட்ட அந்த ரயில் தற்சமயம் எங்கிருக்கிறது என்ற விவரத்தையும் இந்த செயளியில் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்த NTES அப்ளிகேஷனின் இன்னும் ஒரு சிறப்பம்சம் லைவ் ஸ்டேஷன் (Live Station) இது நீங்கள் இருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து நீங்க பயனிக்க வேண்டிய இத்திற்கு அடுத்த 2 அல்லது 4 மணி நேரத்தில் எத்தனை ரயில்கள் இருக்கின்றன என்பதை பட்டியலிடும்.

மேலும் ட்ரெயின் ஷெடியுள் (Train Schedule) என்ற அம்சமும் இதில் உள்ளது. இதன் மூலம் நீங்க பயனிக்கும் ரயில் எத்தனை நிலையங்களில் நிற்கும் என்றும் எத்தனை மணிக்கு ஒவ்வொரு நிலையத்தை அடையும் என்ற தகவலையும் உங்களுக்கு அளிக்கும். மேலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் இருக்கும் இடைவெளியையும் கிலேமீட்டர் கனக்கில் தெளிவாக காட்டும். புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த அப்ளிகேஷனில் இரு ரயில் நிலையங்களின் தகவல்கள் மட்டும் இல்லாமல் கேன்செல்டு ட்ரெயின், ரீ ஷெடில்யூடு ட்ரெயின் மற்றும் டைவர்டெட் ட்ரெயின் என அம்சங்கள் இருக்கின்றன, ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் இல்லாமல் விண்டோஸ் போன் பயனாளிக்கும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Indian Railway brings Another App Called NTES. Here you will find the details of the new app and its uses.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X