உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..!!
உலகளவில் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 336 மில்லினாக இருப்பதோடு, 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை அதிகபட்சமாக 19.3 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
விரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..!!
உலகம் முழுவதிலும் ஸ்மார்ட்போன் சந்தைகளின் அபார வளர்ச்சியானது இந்தாண்டின் முதல் அரையாண்டு வரை சுமார் 40 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ. 8000 பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!
அதன் படி 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் வர்த்தக நிறுவனங்களில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இடம் பிடித்திருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலை பாருங்கள்..

சாம்சங்
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 21.3 சதவீத சந்தை பங்குகளுடன் 97,986 கருவிகளை விற்பனை செய்து பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கின்றது.

ஆப்பிள்
13.1 சதவீத சந்தை பங்குகளுடன் ஆப்பிள் நிறுவனம் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் முதல் காலாண்டு நிலவரப்படி சுமார் 33,002 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து 7.2 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

எல்ஜி
19,637 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து எல்ஜி நிறுவனம் 4.3 சதவீத பங்குகளுடன் டாப் 10 பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கின்றது.

லெனோவோ
மோட்டோரோலா நிறுவனத்தை கைப்பற்றிய லெனோவோ நிறுவனம் 4.2 சதவீத பங்குகளுடன் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.

ஹூவாய்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் 4.0 சதவீத பங்குகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது.

சியோமி
3.2 தவீத பங்குகளை கொண்டிருக்கும் மற்றொரு சீன நிறுவனமான சியோமி ஏழாவது இடத்தினை கைப்பற்றியிருக்கின்றது.

டிசிஎல்
ஆல்காடெல் என அழைக்கப்படும் சீன நிறுவனமான டிசிஎல் 3.1 சதவீத பங்குகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கின்றது.

இசட்டிஈ
12,600 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்து பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்திருக்கின்றது இசட்டிஈ

மைக்ரோமேக்ஸ்
இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த ஒரே இந்திய நிறுவனம் என்பதோடு 8,158 ஆயிரம் கருவிகளை விற்பனை செய்திருக்கின்றது மைக்ரோமேக்ஸ்.

முகநூல்
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் வாசிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications