இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!

|

இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்நிலையில் சீனாவை புறக்கணிக்க சீன தயாரிப்புகளின் பட்டியலை கூகுளில் அதிகமான இந்தியர்கள் தேடுகின்றனர்.

கிழக்கு லடாக்கின்

மேலும் சீன தயாரிப்புகளுக்கு மாற்று இருக்கிறதா என்பதையும் தேடுபொறியில் மக்கள் அதிகளவு பார்க்கின்றனர், அதாவது கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக் தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த 5 வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது.

பேச்சு நடந்தாலும் பதற்றம்

பின்பு இரு தரப்பிலும் படைகளை குவித்து வந்தனர், இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததேத் தவிர-பிரச்சனை தீரவில்லை. இந்த நிலையில் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் கடந்த திங்கள் அன்று இரவு இந்திய,சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20இந்திய ராணுவத்தினர் உயிரழந்தினர்.

48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை ஜூன்23!48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை ஜூன்23!

தரப்பில் 40பேர்வரை உயிரிழப்பு

அதேபோல சீன ராணுவம் தரப்பில் 40பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உளள்து. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது.

எல்லையில் இருதரப்பு

குறிப்பாக இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பலரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தபோது, விது வினோத்

இந்த மாத தொடக்கத்தில் எல்லையில் பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தபோது, விது வினோத் சோப்ராவின் '3 இடியட்ஸ்' படத்திற்கு ஊக்கமளித்த சோனம் வாங்சுக்,சீன தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். #BoycottChina, #BoycottMadeinChina, #BoycottChineseApps மற்றும் #BoycottTiktok ஆகியவை சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின.

 நடக்கும் இந்த

இந்திய-சீன எல்லையில் நடக்கும் இந்த பிரச்சனையால் டிக்டாக் செயலியை மக்கள் அதிகளவு டெலிட் செய்துவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சில சீன ஆப் வசதிகளை கூட இந்தியர்கள் டெலிட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ன் சீனா' தயாரிப்புகளின்

இதற்கிடையில், ஜூன் 16 ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்த பின்னர் புறக்கணிக்கப்பட வேண்டிய 500 க்கும் மேற்பட்ட 'மேட் இன் சீனா' தயாரிப்புகளின் பட்டியலை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) வெளியிட்டுள்ளது.

போன்றவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் உள்ள தயாரிப்புகளில் பொம்மைகள், துணிகள், ஜவுளி, ஆடை, அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள்,வன்பொருள், காலணி, கைப்பைகள், சாமான்கள், மின்னணுவியல், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள், மின்னணுவியல், கைக்கடிகாரங்கள், கற்கள் மற்றும் நகைகள், எழுதுபொருள், காகிதம், வீட்டு பொருட்கள் , சுகாதார பொருட்கள்,
வாகன பாகங்கள் போன்றவைபோன்றவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Indian People's Searching More about Boycott China Products and Lists: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X