உலகின் முதல் பேட்டரி இல்லா வீடியோ கேமரா கண்டறியப்பட்டுள்ளது

By Meganathan
|

பேட்டரி இல்லாமல் தானாக சக்தியூட்டி கொள்ளும் முதல் வீடியோ கேமராவினை இந்திய வம்சாவெளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ப்ரோடோடைப் கேமராவினை உருவாக்க முதலில் வெளிச்சத்தினை மின்சாரமாக மாற்றும் பிக்சலினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

டிஜிட்டல் இமேஜிங் புரட்சியின் நடுவில் நாம் இருக்கின்றோம், கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 200 கோடி கேமராக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியின் தலைவரான ஸ்ரீ கே நாயர் தெரிவித்தார்.

உலகின் முதல் பேட்டரி இல்லா வீடியோ கேமரா கண்டறியப்பட்டுள்ளது

அணியக்கூடிய கருவிகள், சென்சார் நெட்வர்க் மற்றும் பல வித ஸ்மார்ட்கருவிகளில் டிஜிட்டல் இமேஜிங் பயன்படுத்தப்படுவதோடு கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தாமல் இயங்கும் கேமரா பல விதங்களில் பலருக்கும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கேமரா பயன்படுத்தாத நேரங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் வாட்ச் போன்ற கருவிகளுக்கும் சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Most Read Articles
Best Mobiles in India

English summary
The world’s first self-powered video camera that runs without a battery and can produce an image each second has been developed

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X