உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

|

சாதனைகள் படைப்பதற்க்கு மொழி,இனம்,தேசம் என்ற வேறுபாடு இல்லை. உலக அளவில் பலர் இவைகளை எல்லாம் கடந்து சாதனைகள் படைத்துள்ளனர்.

இந்தியர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அமெரிக்கா,பிரிட்டன் முதல் ஆப்ரிக்கா, அர்ஜென்டினா வரை இந்தியர்கள் பல சாதனைகள் படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் சாதனைகளில் இந்தியரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிரசிடென்டாக சுக்கிந்தர் சிங் கேசிடி இருந்தார். இதுவே உலக அளவில் இந்தியர்கள் படைத்த சாதனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

உலக அளவில் இது போன்ற பலர் சாதனை பட்டியலில் உள்ளனர். நாம் இப்பொழுது இந்திய வம்சாவழியில் பிறந்து உலக அளவில் சாதித்த இந்தியர்களை பற்றி பார்போம்.

கீழே உள்ள சிலைட் சோவில் சாதனை படைத்த இந்தியரிகளின் படங்கள் மற்றும் அவர்களது சாதனை பட்டியலை பாருங்கள்.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

சுக்கிந்தர் சிங் கேசிடி

ஜூன் 1993ல் மெரில் லின்ஞ் எனும் நிறுவனத்தில் பினான்சியல் அனலிஸ்டாக தனது வாழ்க்கையை தொடங்கினார் இந்திய பெண்ணான சுக்கிந்தர் சிங் கேசிடி.

அதன் பின்பு அமேசான்,யாட்லீ போன்ற பல நிறுவனங்களில் பணி புரிந்தார்.

அக்டோபர் 2003ல் கூகுளில் சேர்ந்தார். அதன் பிறகு இவரது முகம் மிகவும் பிரபலமானது. கூகுள் நிறுவனத்தில் இவரது பங்கு மகத்தானது.

ஏப்ரல் 2009 வரை கூகுள் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் லேடின் அமெரிக்க பிரவுகளுக்கு பிரசிடென்டாக சுக்கிந்தர் சிங் கேசிடி இருந்தார்.

ஜனவரி 2011ல் ஜாயஸ்.காம் எனும் நிறுவனத்தை தொடங்கி இன்று வரை அதன் சிஈஓ வாக இருந்து வருகிறார்.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

சிம்மர்பால் சிங்

நேஷ்னல் டைரி டெவலப்மென்ட் போர்டில் ஜூன் 1998 ஆம் ஆண்டு அசிஸ்டன்ட் எக்ஸிகியுடிவாக சேர்ந்தார் சிம்மர்பால் சிங். இதில் மார்ச் 2000 வரை பணியில் இருந்தார்.

பின்பு பல நிறுவனங்களில் பணி புரிந்து செப்டம்பர் 2001ல் ஓலம் நிறுவனத்தில் பிரான்ச் மேனேஜராக சேர்ந்தார். அன்று முதல் அவரது வெற்றி பயணம் தொடங்கியது.

மே 2005 முதல் இன்று வரை ஓலம் நிறுவனத்தில் அர்ஜென்டினா தலைவராக உள்ளார்.

ஓலம் நிறுவனம் விவசாயத்தை சேர்ந்த தொழிலை செய்கிறது. சோயா பீன்ஸ், பீநட்ஸ் போன்றவைகளை உற்ப்பத்தி செய்கின்றனர்.

அர்ஜென்டினா வில் உள்ள ஓலம் நிறுவனமே உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பீநட்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகும்.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

சுமா சக்ரபர்தி

1959 ஆம் ஆண்டு பிறந்த சுமா சக்ரபர்தி தனது கல்லூரி படிப்பை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் முடித்தார்.

பல இடங்களில் இவர் தனது சேவை பணிகளை செய்தார். 2007-2012 UK மினிஸ்ட்ரி ஆப் ஜஸ்டிஸ் ல் நிரந்தர செக்ரட்ரியாக இருந்தார்.

இப்பொழுது ஜூலை 3 2012 முதல் அடுத்த நான்கு ஆண்டிற்க்கு ஈரோப்பியன் பேங் ஆப் ரிகன்ஸ்ட்ரக்சன் அன் டெவலப்மென்டில் பிரசிடென்டாக பணியாற்றுவார்.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

அஸ்வனி அன் சரோஜ் நாக்பால்


அஸ்வனி அன் சரோஜ் நாக்பால் 30 வருடங்களுக்கு முன்பே இந்தியன் பேலஸ் ரெஸ்டாரன்டை வின்னிபெக் எனும் நகரில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இப்பொழுது மோட்டார் ஹோட்டலை 2 மில்லியன் டாலருக்கு வாங்கி அதில் 2.5 மில்லியன் டாலரை மேற்கொண்டு செலவு செய்து மாடர்ன் ரெஸ்டாரன்டாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இவர்களின் இந்த முடிவு கனடாவில் படிக்க வரும் இந்தியா மற்றும் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை குறி வைத்தே உள்ளது.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

இராம்கிருஷ்ணா கருதுரி

சாய் இராம்கிருஷ்ணா கருதுரி அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஞ்னியர். கருதுரி குளோபல் லிமிடெட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

கென்யாவில் ரோஜா பூக்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தார்.

பின்பு எத்தியோப்பியாவில் ப்பிளோரிக் கல்ச்சர் முறையில் இதை செய்ய முடிவு எடுத்தார். எத்தியோப்பியாவின் தலைநகரான அட்டிஸ் அப்பாவில் தொடங்கினார்.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

பெர்ஜீஸ் டி சுர்டி


பெர்ஜீஸ் டி சுர்டி, இந்தியா பவர் எக்கியூப்மென்டின் ஆப்பிரிக்கன் பிரிவுகளுக்கு தலைவராக 1995 ஆம் ஆண்டு நைரோபிக்கு சென்றார்.

பெர்ஜீஸ் டி சுர்டி ஸ்பெனோமெடிக் எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதற்க்கு 5 மில்லியன் டாலர் மூலதனமாக செலவு செய்தார்.

இப்பொழுது ஸ்பெனோமெடிக் பல ஈரோப்பியன் கம்பெனிகளை பின்னுக்குத்தள்ளி பெரிய பாய்லர் நிறுவனமாக விளங்குகிறது.

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

உலக அளவில் சாதித்த இந்தியர்கள்..

ஜோஸ் பாராயங்கேன்

ஜோஸ் பாராயங்கேன் தனது பட்டப்படிப்பை டில்லியிலும் , MBA படிப்பை ஜம்ஷெத்பூரிலும் முடித்தார்.

1986 ஆம் ஆண்டு எக்ஸிம் பேங் சம்மந்தப்பட்ட வேலைக்காக ஜோஸ் பாராயங்கேன் ஆப்ரிக்காவில் உள்ள மொசாம்பிற்க்கு சென்றார்.

இப்பொழுது ஜோஸ் பாராயங்கேன் ஆப்ரிக்காவில் 100 மில்லியன் டாலர் முதலீடு கொண்டவராக உள்ளார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X