நீரிழிவு நோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கண் ஸ்கேனர்! இந்திய பொறியாளர் சாதனை.!

|

95.5 சதவிகித துல்லியத்துடன் நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறியக்கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்கிரீனிங் முறையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளரும் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ளனர்.

தானே கண்டறியும் திறன்

தானே கண்டறியும் திறன்

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது, நிபுணத்துவம் மிக்க கண் மருத்துவரின் எந்தவொரு ஆலோசனையும் இன்றி தானே கண்டறியும் திறன் கொண்டது. மேலும் இந்த அமைப்பு வெறும் ஒரு நிமிடத்தில் தனது பரிசோதனை முடிவுகளை தரவல்லது.

அளவுகளை சரியாக கட்டுப்பாடாக

இது அமெரிக்க ஆப்தல்மோலஜி அகாடமியின் 123 வது கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாபடிக் ரெட்டினோபதி எனும் கண்களை பாதிக்கக்கூடிய நீரழிவு நோய் காலப்போக்கில் உருவாகலாம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதிலும் குறிப்பாக இரத்த சர்க்கரை அளவுகளை சரியாக கட்டுப்பாடாக வைத்திருக்காதவர்களுக்கு இதன் ஆபத்து அதிகம்.

48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நேரடியாக இரத்தத்தை அனுப்பும்

உயர் இரத்த சர்க்கரை அளவு கண்களுக்கு பின்னால் உள்ள சிறிய இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுத்தும். இதன் காரணமாக அந்த நாளங்களில் இருந்து அதன் சிறு பகுதிகள் நீண்டுகொண்டுவருவதால், நீரை வெளிவிடுவதுடன், ரெடினா எனப்படும் விழித்திரைக்கும் நேரடியாக இரத்தத்தை அனுப்பும்.

ஸ்மார்ட்போனில் சார்ஜிங் நிற்காட்டி கூகுள் சேவையும் காரணமாம்.!ஸ்மார்ட்போனில் சார்ஜிங் நிற்காட்டி கூகுள் சேவையும் காரணமாம்.!

பரிசோதனை செய்ய கண் மருத்துவர்கள்

இவ்வாறு தொடர்ந்து நீர்வடிவது, கண்பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியான விழித்திரையில் நீர்கட்டு எனப்படும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து சிகிச்சை எடுக்காவிட்டால்
அது நிரந்தர குருட்டுத்தனத்திற்கு வழிவகுக்கும்.

இந்த நீரிழிவு ரெட்டினோபதிக்கான சிகிச்சைகள் உள்ளபோதிலும், ஆரம்ப கட்டத்தில் இது கண்டறியப்படும்போது மட்டுமே அவை சிறப்பாக செயல்படுகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்ய கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொறியாளர் கவுசால் சோலங்கி

ஐஆர்ட் என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு (இந்திய வம்சாவளி பொறியாளர் கவுசால் சோலங்கி என்பவரால் நிறுவப்பட்ட ஐனுக் ஐஎன்சி நிறுவனம் உருவாக்கியது ) முந்தைய ஆய்வுகளில் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த அமைப்பு நீரிழிவு நோயுள்ள 893 நோயாளிகளை 15 வெவ்வேறு மருத்துவ இடங்களில் பரிசோதித்தது. துல்லியமான முடிவுகளைப் பெறவதற்காக, சான்றளிக்கப்பட்ட தர ஆய்வாளர்களால் இந்த முடிவுகள் பின்னர் மறுஆய்வு செய்யப்பட்டன.

கண் நோய்களைக் கொண்டிருந்தனர்

நோயாளிகளின் மதிப்பிடப்படாத படங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஐஆர்ட்டி அமைப்பு 95.5 சதவிகிதம் துல்லியமானதாகவும், 86% குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு சில கண்கள் மட்டும் விரிவாக்கப்பட்டன. இது 86.5 சதவிகிதம் சிறந்த மற்றும் 97.4 சதவீத துல்லிய முடிவுகளை வெளிப்படுத்தியது.

ஐஆர்ட்டின் செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்ட கண்களில் ஒட்டுமொத்தமாக 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு ரெட்டினோபதி அல்லது வேறு சில கண் நோய்களைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: indiatimes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian-Origin Engineer Creates AI-Based Eye Scanner To Detect Diabetes With 95% Accuracy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X