வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் பதறிய வாடிக்கையாளர்.!!

By Meganathan
|

உலகில் ஸ்மார்ட்போன் கருவிகள் வெடித்துச் சிதறும் சம்பவம் பலமுறை அரங்கேறியுள்ளது. தினசரி அடிப்படையில் பலரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற முக்கிய காரணமாக அதன் பேட்டரி, பாழான சார்ஜர், அல்லது சீரற்ற மின் விநியோக முறைகளைக் கூற முடியும்.

சில சமயம் கருவியில் நீர் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளின் காரணங்களுக்காகவும் அவை வெடித்துச் சிதறலாம். அந்த வகையில் இந்திய பயனாளி ஒருவர் தனது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதை தொடர்ந்து ட்விட்டரில் தனது குமுறலை பதிவு செய்திருக்கின்றார்.

வெடிப்பு

வெடிப்பு

இந்திய மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பிளஸ் வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால் பதற்றமடைந்துள்ளார். இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்ததைத் தொடர்ந்து தனது கருவி வெடித்துச் சிதறியதாக சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் கொசெயின் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

போன் வெடித்ததும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்பு கொண்ட தீபக் இதில் தனது உயிரே போய் இருக்கும் எனப் பதிவு செய்திருந்தார்.

புதிய போன்

புதிய போன்

போன் வெடித்த சம்பவத்திற்கு பதில் அளித்த ஒன்பிளஸ் நிறுவனம் புதிய கருவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. எனினும் தனக்கு தகுந்த சன்மானம் மற்றும் புதிய ஐபோன் கருவி வேண்டும் என தீபக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிறுவனம்

நிறுவனம்

வாடிக்கையாளர் நலன் தான் எங்களுக்கு முக்கியம் ஆகும். எங்களது அனைத்துக் கருவிகளும் சந்தையில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என ஒன் பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமரசம்

சமரசம்

மேலும் ஒன்பிளஸ் நிறுவன அதிகாரிகள் கொசெயினை தொடர்பு கொண்டு வருவதாகவும், இது பொது விவாதத்திற்கு வந்திருப்பதால் இது குறித்த தகவல் எதையும் வழங்க இயலாது என ஒன்பிளஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian OnePlus One user's phone bursts into flames while charging Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X