ஆழ்கடலில் இலக்கை அழிக்கும் ஆயுத சோதனை வெற்றி: அசத்தும் இந்திய கடற்படை.! வீடியோ.!
இந்திய கடற்படை தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஆழ்கடலில் இருக்கும் இலக்கை கூட துல்லியமாகத் தாக்கி அழிக்கும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டார்பிடோ வெடிகுண்டை இந்தியக் கடற்படை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.
டார்பிடோ: அதாவது ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உடன் இந்திய கடற்படை இணைந்து அதிக எடை கொண்ட டார்பிடோ ஆயுதத்தை உருவாக்கியுள்ளது. பின்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய வகையில் இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆழ்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய வகையில் உயர் தொழில்நுட்பத்தில் இந்த ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த டார்பிடோ ஆயுதம் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்த வீடியோவை இந்திய கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் தன் ட்விட்டர் பக்கத்தில், நீருக்கு அடியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆயுதத்தை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கி இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு நிறுவனமான டிஆர்டிஒ புது மைல்கல்லை அடைந்து உள்ளதாகக் கூறியுள்ளார். பின்பு ஆத்மநிர்பார் பாரதம் திட்டத்தின் மூலம் எதிர்கால போர் தயார் நிலைக்கான எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில், எம்.எச் 60 வகை ரோமியோ ஹெலிகாப்டரை தரையிறக்கி இந்தியக் கடற்படை மற்றொரு மைல்கல்லை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3: இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சந்திரயான்-2 ஆனது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. குறிப்பாக 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடைந்தது சந்திரயான்-2 விண்கலம். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. இருந்தபோதிலும் அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த உள்ளது இஸ்ரோ. குறிப்பாக சந்திரயான்-3 குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்னவென்றால், நிலவு பற்றிய ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பு இந்த முறை விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர்
கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








