தார் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையா? விளக்கம் கொடுத்த இந்தியா ராணுவம்!

|

பொக்ரான் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர வெடி சத்தம் கேட்டதானால் பொதுமக்கள் பீதியடைந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. தேவையில்லாமல் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இராணுவ சோதனை தளம்

இராணுவ சோதனை தளம்

இந்திய ராணுவம், ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவன பகுதியைச் சோதனை தளமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்திய ராணுவத்தின் பல்வேறு இராணுவ சோதனைகள் இங்கு தான் மேற்கொல்லப்பட்டு வருகின்றது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதியில் அணுக்குண்டு சோதனை தளமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அணுகுண்டு சோதனை

அணுகுண்டு சோதனை

அப்துல் கலாம் தலைமையில், பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் தார் பாலைவன பகுதியில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க இந்த செயலை செயற்கைக்கோள் படங்கள் மூலம் அறிந்து கொண்டு, நரசிம்மரா விடம் அணுகுண்டு சோதனையை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டது.

புதிய விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!புதிய விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியது போல் அணுகுண்டு சோதனைகள் நிறுத்தப்பட்டது. ஆனால் வாஜ்பாய் பிரதமரான போது, மீண்டும் பொக்ரானில் மே 11 மற்றும் 13, 1998 ஆகிய தேதிகளில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பொதுமக்கள் பீதி

பொதுமக்கள் பீதி

இந்நிலையில் நேற்று மாலை பொக்ரான் பகுதியில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்து அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அறிவிப்பில்லாமல் நடத்தப்பட்ட இந்த செயலால் பொதுமக்கள் அஞ்சியுள்ளனர்.

களமிறங்க GoPro Hero8 மற்றும் GoPro Hero Max! விலை என்ன தெரியுமா?களமிறங்க GoPro Hero8 மற்றும் GoPro Hero Max! விலை என்ன தெரியுமா?

கிளம்பிய வதந்திகள்

கிளம்பிய வதந்திகள்

இந்த செய்தியினால் இந்தியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்துவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது, இந்திய ராணுவத்தின் பழைய பீரங்கி குண்டுகள் நேற்று மாலை தார் பாலைவன பகுதியில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயப்பட தேவையில்லை

பொதுமக்கள் பயப்பட தேவையில்லை

இதனால் மட்டும் தான் பொதுமக்கள் அப்பகுதியில் வெடுக்குண்டு சத்தத்தைக் கேட்டுள்ளனர் என்றும், அணுகுண்டு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian Military Explained The Reason Behind Loud Blasts Near Pokhran Desert Land : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X