'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

Written By:

இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத போக்கிமான் கோ கேமினை திருட்டுத் தனமாக விளையாடி வருகின்றீர்களா? உங்களுக்கென வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது டிரெஷர் ஹண்ட் கோ நாஷிக் கேம் .

'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

நாஷிக் நகரைச் சேர்ந்த சபுசா லேப்ஸ் எனும் நிறுவனம் டிரெஷர் ஹண்ட் கோ நாஷிக் எனும் புதிய கேமினை வெளியிட்டுள்ளது. இந்த கேம் நாஷிக் நகரில் மட்டும் விளையாடும் படி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் போக்கிமான் கோ போன்ற அனுபவத்தையும் வழங்குகின்றது.

'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

போக்கிமான் கோ விளையாட்டு மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளது, இதனைத் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது தான் டிரெஷர் ஹண்ட் கோ நாஷிக். ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என சபுசா லேப் நிறுவனத்தின் தலைவர் மனாஸ் கஜாரி தெரிவித்துள்ளார்.

'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

டிரெஷர் ஹண்ட் கோ கேமினை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ததும் மேப் பயன்படுத்தி அருகாமையில் இருக்கும் இடங்களை அடைய வேண்டும். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் 10 புள்ளிகள் வழங்கப்படுவதோடு அடுத்த இடத்திற்குச் செல்ல புதிர் வழங்கப்படுகின்றது. நாஷிக் நகரைச் சுற்றி மொத்தம் 60 இடங்கள் இந்த கேமினில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

இந்தியாவின் மற்ற நகரங்களில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், தமிழ் நாட்டிலும் இந்த கேம் வருமா பாஸ்? என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

English summary
Indian Made game competes Pokemon Go in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot