பதன்கோட் தாக்குதல் : பழிவாங்கி அஞ்சலி செலுத்திய இந்திய ஹேக்கர்கள்..!

|

கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் வான்படை நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவ உடையணிந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த கொழைத்தனமான தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நல்லுறவை குலைக்கவே, பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்று இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது ஒருபக்கம் இருக்க, இந்திய ஹேக்கர்கள் தங்கள் பங்கிற்கு பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்தி பழி தீர்த்துள்ளனர்.

மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

அஞ்சலி :

இந்தியன் பிளாக் ஹாட்ஸ் Indian Black Hats (IBH) என்ற கேரளாவை சேர்ந்த ஹேக்கர்கள் பதான்கோட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தங்களுக்கே உரிய பாணியில் அஞ்சலி செய்துள்ளனர்.

மொத்தம் :

இந்தியன் பிளாக் ஹாட்ஸ் ஹேக்கர்கள் குழுவானது மொத்தம் 7 பாகிஸ்தானிய வலை தளங்களை ஹேக் செய்துளனார்.

பாகிஸ்தான் பார் கவுன்சில் :

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தானிய வலைதளங்களில் பாகிஸ்தான் நாட்டின் பார் கவுன்சில் (Pakistani Bar Council) வலைதளமும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரஞ்சன் குமார் :

மேலும் இந்த ஹேக் தாக்குதல் ஆனது, தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்த லெப்டினென்ட் கர்னல் நிரஞ்சன் குமார் அவர்களின் 18 மாத குழந்தை 'விஸ்மயா'விற்கு சமர்ப்பிப்பதாகவும் இந்தியன் பிளாக் ஹாட்ஸ் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளன.

விஸ்மயா :

ஹேக் செய்யப்பட்ட வலைதளங்களில் விஸ்மயாவின் புகைப்படமிட்டு மெசேஜ் ஒன்றையும் இந்தியன் பிளாக் ஹாட்ஸ் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளன.

குறிப்பு :

ஹேக் செய்யப்பட்ட வலைதளங்களில் எழுதப்பட்டுள்ள குறிப்பு இது தான்.

பட்டியல் :

சைபர் தாக்குதல்களுக்கு உள்ளான பாகிஸ்தான் வலை தளங்களின் பட்டியல்.

www.csd.gov.pk,

www.pakistanbarcouncil.org,

www.mona.gov.pk,

www.fotile.pk,

www.maslamsons.com,

www.cpakgulf.org and

www.solp.pk

சைபர் தாக்குதல் :

"நாங்கள் படை அணி, நாங்கள் பெயர் இல்லாதவர்கள். நாங்கள் மன்னிக்க மாட்டோம்" என்று கூறி சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராகவும் இந்திய ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் சைபர் டேவில்ஸ் :

இந்தியன் பிளாக் ஹாட்ஸ் என்ற ஹேக் குழுவானது கடந்த 2014-ஆம் ஆண்டில் தான் தனது பெயரை மாற்றிக்கொண்டது, 2011-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் போது இதன் பெயர் இந்தியன் சைபர் டேவில்ஸ் (Indian Cyber Devils) என்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

1942 - 2013 : உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு' சம்பவங்கள்..!

'ஹேக்' செய்யப்பட்ட நாசா, அம்பலமான ரகசிய தகவல்கள்..!

ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Indian Hackers Pay Unique Tribute To Pathankot Martyrs. Read more about this Tamil GizBot.

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more