Just In
- 10 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 10 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 11 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 1 day ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- News
புகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. !
- Sports
இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை
- Movies
உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை !
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியர்கள்..!
இந்தியாவிற்குள் நுழைய என்னென்ன வழி கிடைத்தாலும், அதை பயன்படுத்திக்கொண்டு குற்றச்செயல்கள் புரிவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்வதாய் இல்லை என்பதற்கு மற்றும் ஒரு ஆதாரம் தான், கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி (ஞாயிறு) இரவு கேரளாவின் அரசு வலை தளமான ‘www.keralagov.in' ஹேக் (Hack) செய்யப்பட்ட சம்பவம்..!
அம்பலமானது பாகிஸ்தானின் 'சதி' திட்டம்..!
பாகிஸ்தான் ஹேக்கர்கள், கேரள அரசு வலைதளத்தை 'ஹேக்' செய்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இந்திய ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துள்ளனர்..!
உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!
மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சந்தேகம் :
ஹேக் செய்யப்பட்ட கேரள வலைதளத்தில் இந்திய கொடி தீப்பிடித்து எரிவது போன்ற ஒரு புகைப்படமும் பாகிஸ்தானை சார்ந்த சில ஸ்லோகன்களும் (Pro-Pakistan Slogans) எழுதப்பட்டுள்ளத்தால் இது பாகிஸ்தானின் செயலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

போர் நோக்கம் :
இதை போர் நோக்கத்தோடு செய்யப்பட்ட ஒரு செயலாக கருதுவதாக கேரளாவின் உள்த்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதல (Ramesh Chennithala) தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பதிலடி :
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவை சேர்ந்த சைபர் வாரியர்ஸ்கள், 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வலைதளங்களை 'ஹேக்' செய்து பழி தீர்த்துள்ளனர்.

பெயர் :
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்த ஹேக்கிங் வேலைக்கு, இந்திய ஹேக்கர்கள் #ஓப்பாக் (#OpPak) என்று பெயர் சூட்டி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துள்ளனர்.

முடக்கம் :
பாகிஸ்தான் ஹேக்கர்கள், கேரள அரசு வலைதளத்தை 'ஹேக்' செய்த சில மணி நேரத்திலேயே இந்தியா ஹேக்கர்கள் பாகிஸ்தானின் முக்கிய வலைதளங்களை முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக். பிரதமர் வலைதளம் :
ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் வலைதளங்களில், பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைதளமான pakistan.gov.pk வலைதளமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..!

உடைப்பு :
மேலும் பாகிஸ்தான் முன்னேற்ற அமைப்பின் வலைதளமான culture.gov.pk மற்றும் பாகிஸ்தானின் e-government.gov.pk வலைதளம் ஆகியவைகளும் இந்திய ஹேக்கர்களால் உடைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழி நடவடிக்கை :
இந்திய ஹேக்கர்கள் இதை பாகிஸ்தானுக்கு எதிராக பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாக நடத்தி உள்ளனர் என்கின்றன இந்தியாவில் உள்ள ஹேக்கிங் அமைப்புகள்.

ஹெல் ஷீல்டு ஹேக்கர்ஸ் :
"இந்திய அரசாங்கம் எதுவும் செய்யாது. நாங்கள் செய்வோம். எந்த லாபத்தையும் எதிர்பாராது இந்தியாவை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்..!" என்று கூறி உள்ளது 'ஹெல் ஷீல்டு ஹேக்கர்ஸ்' (Hell Shield Hackers) அமைப்பு.

ஆஃப்லைன் :
மேலும் 'ஹெல் ஷீல்டு ஹேக்கர்ஸ்' அமைப்பு "பாகிஸ்தான் எங்கள் நாட்டு வலைதளத்தை ஹேக் செய்தனர், பதிலுக்கு நாங்கள் அவர்களை ஆஃப்லைனுக்கு (Offline) துரத்தினோம் என்றும் கூறியுள்ளது.

பதிவு :
இந்திய ஹேக்கர்கள் தாங்கள் ஹேக் செய்த பாகிஸ்தான் வலைதளங்களின் பட்டியலை பேஸ்ட்பின்.காம் (pastebin.com) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை :
ஹேக்டிவிஸ்ட்ஸ் (hacktivists) என்ற அமைப்பு ஆகஸ்ட் 15, 2015-க்கு பிறகு இந்திய ஹேக்கர்கள் ஒரு பாகிஸ்தான் வலைதளத்தை கூட ஹேக் செய்யவில்லை என்று கோரியுள்ளது.

குற்றம் :
இருந்த போதும் பாகிஸ்தானின் ஃபாஸல் அஃப்ஸல் (Faisal Afzal) கேரள அரசு வலைதளத்தை 'ஹேக்' செய்துவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது ஹேக்டிவிஸ்ட்ஸ் அமைப்பு.

நசுக்கி விடுவோம் :
மேலும் அந்த அமைப்பானது "நாங்கள் ஒன்றும் இங்கே தூங்கிக் கொண்டிருக்கவில்லை, நீங்கள் ஏதேனும் இந்திய வலைதளத்தை சீண்டினால், நாங்கள் உங்களை நசுக்கி விடுவோம்..!" என்றும் எச்சரிததுள்ளது.

வல்லுநர் கருத்து :
"கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேவும் இந்த ஹேக் யுத்தம் நடக்கிறது. இது ஒரு தேசப்பற்று போல் ஆகிவிட்டது" என்று கருத்து தெரிவித்துள்ளார் சைபர் குற்ற வல்லுநரான பேனில்ட் ஜோசப் (Benild Joseph).

நடிகர் மோகன் லால் :
மலையாள நடிகர் மோகன் லாலின் அதிகாரப்பூர்வ வலைதளம் என கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் இதே போன்றொரு சைபர் யுத்தத்தில் இரு நாட்டு ஹேக்கர்களும் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பாதிப்பு :
அந்த ஹேக்கிங் யுத்தத்தில் பாகிஸ்தான் வாங்கிய அடியை விட தற்போது தான், பாகிஸ்தானின் முக்கிய அரசு வலைதளங்கள், பொது சேவை வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு அதிகம் நிலை குலைந்து போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கும் :
பாகிஸ்தானுக்கு எதிரான இது போன்ற பதிலடிகள், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஹேக்கர்களை அமைதி இழக்க வைக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

பலவீனம் :
மேலும் ஐடி துறையில் இந்தியா டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாகத்தான் இருக்கிறது என்பதையும் வல்லுநர்கள் நினைவுப்படுத்த விரும்புகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பேனில்ட் ஜோசப்.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999