நள்ளிரவில் மணப்பெண் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ்.! திருமணத்தை உடனே நிறுத்திய மணமகன்.!

|

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு காலையில் நடக்கவிருந்த திருமணம் திடீரென இரவோடு இரவாக நின்றுள்ளதற்கு ஒரே ஒரு மொபைல் மெசேஜ் (mobile message) தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் அதன் உண்மை.! திருமணத்திற்காகக் காத்திருந்த இளம் ஜோடிகளின் நள்ளிரவு சாட்டிங்கால் (chatting) ஒரு திருமணமே இரவோடு இரவாக நின்றுள்ள சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும், இப்போது அனைவரிடமும் ஒரு மொபைல் போன் (mobile phone) உள்ளது. இதில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துகிறார்கள். ஒருவருக்கொருவர் வார்த்தை மூலமாகத் தொடர்புகொள்ள மெசேஜ்களை பயன்படுத்தி மெசேஜ்ஜிங் (messaging) செய்கிறார்கள் - இது இப்போது வழக்கமான ஒரு நடைமுறை ஆகிவிட்டது.

நள்ளிரவில் மணப்பெண் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ்.! நின்றது திருமணம்.!

இப்படி திருமணம் (Marriage) நிச்சயிக்கப்பட்ட இரண்டு புது ஜோடிகளின் மெசேஜ்ஜிங் பழக்கம், அந்த திருமணத்தை இரவோடு இரவாக நிறுத்திவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் இந்தியாவில் நடந்தேறியுள்ளது. நள்ளிரவில் மணமகனுக்கு மணப்பெண் அனுப்பிய ஒரே ஒரு மெசேஜ்ஜினால் நடக்கவிருந்த திருமணம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மாநிலம் அசாமில் உள்ள கவுகாத்தியைச் சேர்ந்த பொறியாளருக்கும், ஹவுலி நகரைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயம் செய்த பின்னர் ஜோடிகள் இருவரும் தங்களின் மொபைல் எண்களைப் (mobile numbers) பரிமாறிக்கொண்டுள்ளனர். இருவரும் அவ்வப்போது மெசேஜ் மூலம் சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதற்கிடையில், தனது வருங்கால மனைவிக்காக மணமகன் சில பரிசு பொருட்களை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து (online gift order), சர்ப்ரைஸ் கிஃப்ட் (surprise gift) ஆக மணப்பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நள்ளிரவில் மணப்பெண் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ்.! நின்றது திருமணம்.!

இந்த பரிசு பொருள் சரியாக, திருமணத்திற்கு முந்தைய நாள் டெலிவரி செய்யப்படும் படி, மணமகன் ஆர்டர் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் பேக்கில் ஷாம்ப்பூ, சில முக அலங்கார பொருட்கள் போன்ற சில அழகு சார்த்தப் பொருட்கள் இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மணப்பெண் தனக்கு வந்த பார்சலை பிரித்துப் பார்த்துவிட்டு மணமகனுக்கு மெசேஜ் செய்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் மணமகளிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை ஆர்வமாக படிக்கச் சென்ற மணமகன் இறுதியில் மனமுடைந்து போய்விட்டார். அப்படி அந்த மெசேஜ்ஜில் மணமகள் என்ன கூறியிருந்தார்? எதற்காக அந்த மெசேஜ்ஜை படித்த பின்னர் மணமகன் விடிந்ததும் நடக்கவிருந்த திருமணத்தை உடனே இரவோடு இரவாக நிறுத்தினார் என்பதை இப்போது பார்க்கலாம்.

நள்ளிரவில் மணப்பெண் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ்.! நின்றது திருமணம்.!

சர்ப்ரைஸ் கிஃப்ட்டை பார்த்த மணப்பெண், மணமகனுக்கு நள்ளிரவில் அவர் வழங்கிய கிஃப்ட் பற்றி ஒரு மெசேஜ்ஜை தட்டிவிட்டிருக்கிறார். அதில், " ஒரு என்ஜினீயராக இருந்து கொண்டு, இப்படி ஒரு மலிவான ஷாம்பூ மற்றும் பேசியல் பொருட்களை அனுப்பிவைத்துள்ளீர்கள் " என்று மணமகள் கூறியிருக்கிறார். இது ஆசையாக கிஃப்ட் செய்த மணமகனின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆசையாக வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை மிகவும் மலிவான பொருள் என்று மணப்பெண் கூறியதை மணமகன் அவமானமாக எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. கடுப்பான மணமகன், "காலையில் நடக்கவிருக்கும் திருமணம் நடக்காது, உன்னை திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை" என்று ரிப்ளை மெசேஜ்ஜை அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அந்த மணப்பெண் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

இறுதியில் இரண்டு வீட்டார்களும் மணமகனிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், மணமகன் யாரின் பேச்சையும் கேட்காமல் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பெண் வீட்டார் வேறு வழியின்றி போலீசில் புகார் செய்துள்ளனர். இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஒரு மெசேஜ்ஜினால் நடவிருந்த திருமணம் இரவோடு இரவாக நின்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Indian Groom Stopped The Marriage After Receiving a Mid-night Mobile Message From Bride

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X