விரைவில் சாத்தியமாகும் இந்திய 'கனவு'.!!
நேவிகேஷன் சார்ந்த சேவைகளில் தனித்து நிற்கும் நோக்கில் சொந்த தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கும் இந்திய அரசின் திட்டம் தான் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். இது அமெரிக்க ஜிபிஎஸ் சேவைக்கு மாற்றாக இருக்கும் படி முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்திய அரசின் முழு கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகின்றது. கார்கில் போரின் போது அமெரிக்க இடஞ்சுட்டி வசதியை பயன்படுத்தியதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

திட்டம்
அதன் படி இந்தியப் பகுத்திக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு திட்டத்தின் கீழ் ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டது.

இஸ்ரோ
இந்தியாவின் வாண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 2013 ஆம் ஆண்டு துவங்கிய இந்த திட்டம் இந்தாண்டிற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். திட்டத்தில் இன்றைய தேதி வரை சுமார் ஐந்து செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளன.

முதல் செயற்கைக்கோள்
பி.எஸ்.எல்.வி சி26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ் 1சி செயற்கைக்கோள் 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவே இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும்.

சேவை
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்புகளை வழங்கும் நோக்கில் செலுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் இரு வித பயன்பாடுகளை வழங்கும்.

துணைக்கோள்
அதன் படி இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் மூலம் பொதுமக்கள் பயன்பாடு மற்றும் இரகசிய இராணுவப் பயன்பாடு என இருவகையில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

ஜிபிஎஸ்
தற்சமயம் வரை ஜிபிஎஸ் சிப் வகைகள் உலகம் முழுக்க பிரபலமாக இருந்தாலும் இந்தியர்கள் ஐ.என்.ஆர்.எஸ்.எஸ் சிப் பயன்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்திருந்தார்.

அம்சம்
தற்சமயம் வெறும் கனவாகவே இருக்கும் ஐ.என்.ஆர்.எஸ்.எஸ் திட்டமானது ஜிபிஎஸ் சேவைகளை விட சிறப்பாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்
குறைந்த பட்ஜெட் சிமுலேட்டர் மற்றும் ரிசீவர்களை கருத்தில் கொண்டு ஐ.என்.ஆர்.எஸ்.எஸ் வடிவமைக்கப்பட்டு வருவதால் இத்திட்டத்திற்கான வரவேற்பு சந்தையில் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருவி
தற்சமயம் வரை இந்த சிப் இந்திய கருவிகளில் முறையாக பொருத்தப்படாததே இந்த திட்டத்தின் பின்னடைவாக கருதப்படுகின்றது. தயாரிப்பாளர்கள் இந்த சிப் வகைகளை பயன்படுத்தாத பட்சத்தில் இதற்கென பிரத்யேக அரசாணை பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

மேக் இன் இந்தியா
முறையான அழுத்தம் கொடுத்தல் மற்றும் இந்திய பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் போன்ற காரணங்கள் இத்திட்டம் விரைவில் செயல்படுத்த அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.

ஜிபிஎஸ்
தற்சமயம் வரை உலகளவில் பிரபலமாக இருக்கும் ஜிபிஎஸ் சேவைக்கு போட்டியாக உருவாகும் இந்தியாவின் ஐ.என்.ஆர்.எஸ்.எஸ் விரைவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே அனைவரின் கனவாக இருக்கின்றது.

வெற்றி
இந்தியர்களுக்கென பிரத்யேக நேவிகேஷன் சேவையான ஐ.என்.ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையில் இத்திட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் இந்தியர்களான நம் கையில் தான் இருக்கின்றது.

மேலும் படிக்க

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications