இந்த எச்சரிக்கை.. குறிப்பாக.. Samsung போன் வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே! என்ன செய்யணும்? செய்யலனா?
சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு ஒரு "எமெர்ஜென்சி எச்சரிக்கை" (Emergency Warning) விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடியாக வருகிறது. அதென்ன எச்சரிக்கை? சாம்சங் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யவில்லை என்றால் என்னவாகும்? இதோ விவரங்கள்:
என்ன எச்சரிக்கை? இந்தியாவில் உள்ள சாம்சங் மொபைல் போன் பயனர்களுக்கு செக்யூரிட்டி வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியாவின் (Computer Emergency Response Team of India) கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு வெர்ஷன்ஸ் 11, 12, 13 மற்றும் 14 இல் (Android Versions 11, 12, 13 and 14) இயங்கும் சாம்சங் போன்கள் ஆபத்தில் உள்ளன.

என்ன ஆபத்து? மேற்குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கும் சாம்சங் போன்கள் சைபர் தாக்குதல்களுக்கு (Cyberattack) ஆளாகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதன் வழியாக உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா அணுகப்படலாம் மற்றும் திருப்படலாம் என்று செர்ட்-இன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுடைய சாம்சங் ஸ்மார்ட்போன் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்காது. அதிலுள்ள முக்கியமான தகவல்களுக்கு, தனிப்பட்ட விவரங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. எனவே தான் இந்திய அரசாங்கம் இதை ஹை-ரிஸ்க் வார்னிங் (High-risk Warning) என்று கூறுகிறது.

இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? சாம்சங்கின் லேட்டஸ்ட் மாடல்களான கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 series), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5), கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5) உட்பட பல சாம்சங் மாடல்கள் ஆண்ட்ராய்டு 11, 12, 13, மற்றும் 14 வெர்ஷன்களை கொண்டுள்ளன. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க உங்கள் ஸ்மார்ட்போனை உடனே அப்டேட் (Update) செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதை செய்ய உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்ல வேண்டும். அதன் பொன்னர் அபௌட் டிவைஸ் (About Device) என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்கிற கிளிக் செய்து.. உங்களுக்கான லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் (Latest OS Update) வந்து சேர்த்திருந்தால்.. கடைசியாக இன்ஸ்டால் (Install) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஒருவேளை அப்டேட் செய்யவில்லை என்றால் என்னவாகும்? செர்ட்-இன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யப்படாத உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக ஹேக் (Hack) செய்யப்பட்டால், ஹேக்கர்களால் ஹீப் ஓவர்ஃப்ளோ (heap overflow) மற்றும் ஸ்டேக் பேஸ்டு பப்ஃபர் ஓவர்ஃப்ளோவை (stack-based buffer overflow) ட்ரிக்கர் செய்ய முடியும்.
இதன் வழியாக ஹேக்கர்களால் சிம் பின்னை (SIM PIN) அணுக முடியும், ஏஆர் ஈமோஜியின் சாண்ட்பாக்ஸ் டேட்டாவை (Sandbox data of AR Emoji) படிக்க முடியும், சிஸ்டம் டைம்-ஐ (System Time) மாற்றுவதன் மூலம் நாக்ஸ் கார்ட் லாக்கை (Knox Guard lock) தவிர்க்க முடியும்.
மேலும் சென்சிடிவ் ஆன ஃபைல்களை (Arbitrary files) அணுக முடியும், முக்கியமான தகவலுக்கான அணுகலை (Sensitive information access) பெற முடியும், தன்னிச்சையான கோட்-ஐ (Arbitrary code) இயக்க முடியும், மற்றும் டார்கெட்டட் சிஸ்டமை (Targeted System) சமரசம் செய்ய முடியும்.
சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் மட்டுமல்ல, மற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களும் கூட இந்த எச்சரிக்கையை தங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் போனிற்கு வரும் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட், செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களை உடனுக்குடன் இன்ஸ்டால் செய்து கொள்வது நல்லது. வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது தான்!


Click it and Unblock the Notifications








