Home
News

உடனே செட்டிங்ஸ் போங்க.. செக் பண்ணி மாத்துங்க.. ஆண்ட்ராய்டு போன் ஓனர்களுக்கு இந்திய அரசு அவசர எச்சரிகை!

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசராக இருந்தால், குறிப்பாக உங்கள் போனில் ஆண்ட்ராய்டு 12, ஆண்ட்ராய்டு 13, ஆண்ட்ராய்டு 14 அல்லது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பயன்பாட்டில் இருந்தால்.. உடனே உங்கள் மொபைல் போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்ல தயாராக இருங்கள்!

ஏனென்றால், மெய்டி (MeiTy) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதென்ன எச்சரிக்கை? ஆண்ட்ராய்டு பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

ஆண்ட்ராய்டு போன் ஓனர்களுக்கு இந்திய அரசு அவசர எச்சரிகை!

மெய்டி-ன் கீழ் இயங்கும் செர்ட்-இன் (CERT-In) என்று அறியப்படும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு (Indian Computer Emergency Response Team) ஆனது ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு பிந்தைய சாஃப்ட்வேர் வெர்ஷன்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக குறிப்பிட்ட ஓஎஸ் வெர்ஷன்களை கொண்டுள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிக தீவிர சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு-ல் உள்ள இந்த பாதிப்புகளுக்கு காரணம் கட்டமைப்பில் (framework ) உள்ள குறைபாடுகள் தான் என்று செர்ட்-இன் தெரிவிக்கிறது; இது சிப்செட் கூறுகளிலும் உள்ள தவறுகளாலும் நடக்கலாம் என்றும் நம்புகிறது. செர்ட்-இன் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டில் பதிவாகியுள்ள இந்த பாதிப்புகள் ஹேக்கர்களுக்கு முக்கியமான தகவல்களை அணுக, பெரிய அளவிலான அணுகல்களை பெற, தன்னிச்சையான குறியீட்டை இயக்க அல்லது டார்கெட் சிஸ்டமில் டிஓஎஸ் (DoS) எனப்படும் டினையல் ஆப் சர்வீஸ்-ஐ ஏற்படுத்த வழிவகுக்கலாம்.

இந்த எச்சரிக்கை மிகவும் கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகளில் (Most severe of security issues) ஒன்றாகும். எனவே, ஆண்ட்ராய்டு 12 (Android 12), ஆண்ட்ராய்டு 13 (Android 13), ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் பயனர்கள் எந்தவொரு சைபர் தாக்குதலையும் தடுக்க, தங்கள் மொபைல் போனை உடனே லேட்டஸ்ட் ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யுமாறு செர்ட்-இன் அறிவுறுத்துகிறது.

இதை செய்ய உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்ல வேண்டும். பின்னர் சிஸ்டம் என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, அதன் பின்னர் சாஃப்ட்வேர் அப்டேட் (Software update) என்பதை கிளிக் செய்யவும். இப்பொது செக் பார் அப்டேட்ஸ் (Check for updates) என்பதை கிளிக் செய்து, லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும். வந்து இருந்தால் அதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

இதற்கு முன்பாக மேக் (Mac), பிசி (PC) மற்றும் லேப்டாப் (Laptop) வழியாக கூகுள் க்ரோம்-ஐ பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் யூசர் டேட்டா இழப்பு மற்றும் டிவைஸ் ஹேக் செய்யப்படுவது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் செர்ட்-இன் கூறி இருந்தது.

செர்ட்-இன் இணையதளத்தின்படி, கூகுள் க்ரோம் தற்போது இரண்டு பெரிய பாதிப்புகளை எதிர்கொள்கிறது - CIVN-2025-0007 மற்றும் CIVN-2025-0008. இவைகள் முறையே முக்கியமான (Critical) மற்றும் அதிக தீவிரத்தன்மை (High) என்கிற மதிப்பீட்டை கொண்டுள்ளன. முதல் பாதிப்பானது - விண்டோஸ் / மேக் இல் உள்ள 132.0.6834.83/8r க்கு முந்தைய கூகுள் க்ரோம் வெர்ஷன்களை பாதிக்கிறது.

மற்றொன்று விண்டோஸ் மற்றும் மேக் இல் 132.0.6834.110/111 க்கு முந்தைய கூகுள் க்ரோம் வெர்ஷன்களையும், லினக்ஸ்-க்கான 132.0.6834.110 க்கு முந்தைய வெர்ஷன்களையும் குறிவைக்கிறது. கூகுள் க்ரோமில் உள்ள இந்த பாதுகாப்பு குறைபாடுகளின் கீழ்.. ரிமோட் அட்டாக்கரால் தன்னிச்சையான கோட்-ஐ இயக்க முடியும், சேவை நிபந்தனைகளை நிராகரிக்க முடியும், முக்கியமான தகவலை எக்ஸ்போஸ் செய்ய முடியும் மற்றும் டார்கெட் சிஸ்டமில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Govt Issues High Risk Warning for Android 12 13 14 15 Users Urge Them to Update Their Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X