Home
News

2027 முதல் நாடு முழுவதும் அமல்.. வருகிறது ஸ்பெஷல் FASTag.. என்ன தகுதி? யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்காக, அதாவது காவல்துறை, ஆயுதப் படைகள் மற்றும் சில அதிகாரப்பூர்வ கார்கள் போன்றவைகளுக்கான, ஒரு சிறப்பு ஃபாஸ்டேக் (Special FASTag) வகையை இந்திய அரசாங்கம் உருவாக்கி / மதிப்பிட்டு வருவதாக தகவல் கிடைத்து உள்ளது

இந்த நடவடிக்கை, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை ஸ்கேன் செய்ய செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தும், வரவிருக்கும் பலவழி தடையற்ற போக்குவரத்து அமைப்பின் (Multi-Lane Free Flow System) ஒரு பகுதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு சுருக்கமாக எம்எல்எப்எப் சிஸ்டம் (MLFF System) என்றும் அழைக்கப்படுகிறது.

2027 முதல் நாடு முழுவதும் அமல்.. வருகிறது ஸ்பெஷல் FASTag.. என்ன தகுதி?

தற்போது, ​விலக்கு அளிக்கப்பட்ட வகையின் கீழ் வரும் வாகனங்கள், சுங்க சாவடிகளில் தவறாக அடையாளம் காணப்பட்டு, கட்டணம் செலுத்தப்படவில்லை என்று கூறி இ-சலான்கள் அல்லது அபராதங்களை சந்தித்து வரும் சிக்கல்கள் நிலவுகிறது. அந்த சிக்கலைச் சரிசெய்வதற்காகவே இந்தப் புதிய ஸ்பெஷல் ஃபாஸ்டேக்குகள் கொண்டு வரப்பட உள்ளது போல் தெரிகிறது/

இதற்காக - அனைத்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்குமான ஒரு மையத் தரவுத்தளத்தை (Central database of all exempt vehicles) உருவாக்குவது அல்லது வரம்பற்ற பயன்பாட்டிற்கான சிறப்பு ஃபாஸ்டேக்குகளை (Unlimited-use special FASTags) வழங்குவது என இரண்டு வகையான முக்கிய தீர்வுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.

சில இராணுவ வாகனங்கள் ஃபாஸ்டேக்குகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, கூடுதல் பாதுகாப்பிற்காக வாகன பதிவு எண் அங்கீகார தொழில்நுட்பத்தை (plate recognition tech) பயன்படுத்தக்கூடும். எம்எல்எப்எப்-க்கான முன்னோட்ட திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன, மேலும் 2027-ஆம் ஆண்டிற்குள், அனைத்து 1150 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளும் இதில் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.

2026 நிதியாண்டில் (கடந்த டிசம்பர் வரை) சுங்கக் கட்டண வசூல் ரூ.50,345 கோடியை எட்டியுள்ள நிலையில், இந்திய நெடுஞ்சாலைகளில் அனைவருக்கும் பயணத்தை மென்மையாகவும் மற்றும் நியாயமாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ள இந்திய அரசுக்கு, இந்த சமீபத்திய ஸ்பெஷல் ஃபாஸ்டேக் மேம்பாடு கூடுதல் துணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடையற்ற சுங்க கட்டணம் என்றால் என்ன? பிஸிக்கல் தடைகளை கொண்ட வழக்கமான சுங்கச்சாவடிகளை போலல்லாமல், இந்த அமைப்பானது சென்சார்கள் மற்றும் கேமராக்கள் (sensors and cameras) பொருத்தப்பட்ட மேல்நிலை சட்டகங்களை (overhead frames) பயன்படுத்தி, வாகனங்களை தானாகவே அடையாளம் கண்டு, நிகழ்நேரத்தில் சுங்க கட்டணங்களை கழிக்கிறது.

அதாவது மல்டி-லேன் ப்ரீ ப்ளோ (Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தடையற்ற சுங்க கட்டண முறையானது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்பதை முற்றிலுமாக தவிர்க்க உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் சக்தி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2026-ல் இந்த அறிமுகம் அறிவிக்கப்பட்டது. அங்கு, இந்தியாவின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், தளவாட செலவுகளை குறைப்பதிலும் இதன் பங்கை, அமைச்சர் கட்கரி எடுத்துரைத்தார்.

ஃபாஸ்டேக் மற்றும் ஏஐ கேமராக்களின் பங்கு: இந்த அமைப்பு ஃபாஸ்டேக்கை தானியங்கி வாகன பதிவு எண் அங்கீகார (ANPR) தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. ஆகையால் ஃபாஸ்டேக் எங்கும் போகாது, இந்த அமைப்பின் கீழ் "வழக்கம் போல"செயல்படும். இதோடு உயர் செயல்திறன் கொண்ட ஏஐ கேமராக்களும் இணையும்.

இது வாகன பதிவு எண்களை "ரீட்" செய்யும். அதே நேரத்தில் ஆர்எப்ஐடி (RFID) ரீடர்கள் ஃபாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்யும். பின்னர், சுங்க கட்டண தொகை இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாக கழிக்கப்படும். இந்த இரட்டை சரிபார்ப்பு அமைப்பு துல்லியத்தை உறுதிசெய்து, பிழைகளை குறைக்கிறது. ஃபாஸ்டேக் செயல் இழந்திருந்தாலோ அல்லது காணாமல் போனாலோ, வாகனத்தை அதன் பதிவு எண் மூலம் அடையாளம் காண முடியும், இது சட்ட அமலாக்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

எப்போது அமலுக்கு வரும்? எங்கெல்லாம் நடைமுறைக்கு வரும்? அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ள தேசிய நெடுஞ்சாலைக்ளுக்கான தடையற்ற சுங்க கட்டண முறை ஆனது உடனடியாக அமலுக்கு வரப்போவதில்லை. இது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இது முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அறிமுகம் ஆகும், பின்னர் விரிவாக்கம் அடையலாம்.

Best Mobiles in India

English summary
Indian government developing special FASTag category for toll exempt vehicles under MLFF System Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X