கூகுள் & ஆப்பிள் நிறுவனத்திடம் "டிக் டாக்" செயலியை நீக்க மத்திய அரசு உத்தரவு.!
டிக் டாக் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு உத்தரவு.
டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்
அதன்படி டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16 ஆம் தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தை நாடிய டிக் டாக்
உயர் நீதி மன்றத்தின் உத்தரவைக் கேட்ட டிக் டாக் நிறுவனம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அங்கும் டிக் டாக் நிறுவனத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

டிக் டாக் செயலியை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில் டிக் டாக் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல் எப்பொழுது?
சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவரும் இந்த டிக் டாக் செயலியை, ஆப் ஸ்டோரில் இருந்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இன்னும் நீக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எப்பொழுது டிக் டாக் செயலியை இரு நிறுவனங்களும் நீக்கம் செய்யும் என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications