உஷார் மக்களே.. இந்த 2 துவக்க நம்பர் அழைப்பை உடனே கட் பண்ணிடுங்க.. வார்னிங் கொடுத்த அரசாங்கம்.. புது சிக்கல்..
இந்தியாவில் ஆன்லைன் மோசடி (online scam), சைபர் குற்றங்கள், இன்டர்நெட் கால்லிங் ஸ்கேம் (internet calling scam) என்று பல விதமான மோசடிகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. இந்த வரிசையில் இணைய அழைப்புகள் (internet calling) மூலம் மக்களை ஏமாற்றும் ஒரு புது விதமான மோசடி குறித்து இந்திய அரசாங்கம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு துவக்க எங்களில் இருந்து வாய்ஸ் அழைப்புகள் வந்தால், அவற்றை தெரியாமல் கூட அட்டென்ட் செய்துவிட வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. மீறினால் என்ன நடக்கும் என்பதையும் விளக்கியுள்ளது.
இந்திய மக்கள் பலர் பல விதமான ஆன்லைன் மோசடிகளில் (online scam) சிக்கி அவர்களின் பணத்தை இழப்பதோடு (money theft scam) மட்டும் இல்லாமல், அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் (personal data theft scam) இழந்து, பாவப்பட்ட நிலைமைக்கு தள்ளப்படும் மோசமான சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து தினசரி அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது. இந்த வரிசையில், மோசடிக்காரர்கள் தற்போது எடுத்துள்ள புதிய மோசடி ஆயுதம் தான் இன்டர்நெட் காலிங் ஸ்கேம்.

உஷார் மக்களே.. இந்த 2 துவக்க நம்பர் அழைப்பை உடனே கட் பண்ணிடுங்க:
பொதுமக்கள் பலர் இப்போது இன்டர்நெட் காலிங் சேவையை (internet voice call facility) அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனால், இந்த வழியை தேர்வு செய்து, மோசடி செய்யும் நபர்கள் இப்போது அப்பாவி பொதுமக்களை அவர்களின் மோசடிக்கு இரையாக்கி வருகிறார்கள். பொதுமக்களுக்கு இனி தெரியாத எண்களில் (unknown numbers) இருந்து ஏதேனும் இன்டர்நெட் அழைப்புகள் வந்தாலோ கவனம் தேவை.
அதேபோல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள 2 முக்கியமான துவக்க எண்களில் இருந்து இன்டர்நெட் அழைப்புகள் வந்தாலோ அவற்றை ஏற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதமான புதிய இன்டர்நெட் காலிங் ஸ்கேம் அழைப்புகள் பெரும்பாலும் +697 அல்லது +698 என்று துவங்கும் எண்களில் இருந்து தான் பொதுமக்களை தாக்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது (warning about 2 voice calls numbers). இந்த எண்களை தொடர்ந்து எந்த எண்கள் வந்தாலும் அந்த அழைப்பை ஏற்கவே வேண்டாம்.
இந்த 2 எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று எச்சரிக்கை:
இந்த எண்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி அழைப்புகள் அணைத்தும் தாய்லாந்தில் இருந்து உருவாக்கப்பட்டு, இந்திய மக்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்களை பயன்படுத்தி, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள மக்களும் மோசடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று ஒரு செய்தியால் தாய்லாந்து தொலைத்தொடர்பு துறை ஆணையம் (Telecommunications Authority of Thailand) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் ஹேக்கர்கள் (hackers) மற்றும் ஸ்கேமர்கள் (scammers) பெரும்பாலும் VPN போன்ற செயலிகளை பயன்படுத்தி, இன்டர்நெட் அழைப்புகளை மேற்கொள்ளுவதினால், இவர்களை அடையாளம் (identifying their identity) காண்பது மிகவும் சிக்கலாகவும் சவாலாகவும் இருப்பதாக சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மோசடிக்காரர்கள் பல விதமான செயல்முறையை ஒன்றிணைத்து பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதனால், இவர்களை அடையாளம் காண்பதற்கு முடியாத நிலை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, +697 அல்லது +698 என்ற துவக்க எண் மற்றும் அடையாளம் தெரியாத புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஒருபோதும் ஏற்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் இது மட்டுமே பொதுமக்களை எளிமையாக பாதுகாக்க உதவும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி குறித்து பொதுமளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தும் படி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நீங்கள் எந்த டெலிகாம் ஆபரேட்டர் நெட்வொர்க்கை (telecom operator network) பயன்படுத்தினாலும், இந்த 2 எண்களில் இருந்து வரும் அழைப்புகள் ஏற்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








