Home
News

மாஸ் பிளான்.. புதிய SIM கார்டு வாங்க புது விதி.. இவங்களுக்கு மட்டும் இது கட்டாயம்.. எந்தெந்த ஆவணம் முக்கியம்?

இந்தியாவில் இனி புதிய சிம் கார்டு (SIM card) வாங்க விரும்பும் இந்தியர் அல்லாத பயனர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் புது விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறை நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SIM card: நேபாளம் (Nepal) மற்றும் பூட்டான் (Bhutan) குடிமக்களுக்கு மொபைல் சிம்கள் அல்லது மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கான KYC (know your customer) விதிமுறைகளை இந்திய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. இரு நாட்டு மக்களுக்கான பயணச் செயல்முறையை எளிதாக்கும் வகையில் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்தியாவில் மொபைல் இணைப்பைப் பெற, செல்லுபடியாகும் விசா ஸ்டாம்ப் (VISA stamp) உடன் தங்கள் பாஸ்போர்ட்டை (Passport) வழங்க வேண்டும்.

மாஸ் பிளான்.. புதிய SIM கார்டு வாங்க புது விதி.. இவங்களுக்கு கட்டாயம்!

நேபாளம் (Nepal) மற்றும் பூடான் (Bhutan) குடிமக்களுக்கு சிம் கார்டு விதி:
இருப்பினும், நேபாளம் (Nepal) மற்றும் பூடான் (Bhutan) குடிமக்களுக்கு (Citizen) இனி அப்படி இருக்காது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்போதிலிருந்து, ​​பாஸ்போர்ட்டைத் தவிர மற்ற ஆவணங்களையும் நேபாளம் மற்றும் பூடான் குடிமக்கள் இந்தியாவில் சிம் கார்டை வாங்க பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நேபாளம் மற்றும் பூட்டானில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்பவர்கள், சிம் கார்டைப் பெறுவதற்குத் தேவையான KYC செயல்முறையை நிறைவேற்ற பின்வரும் ஆவணங்களைக் காட்டலாம்.

தேவையான ஆவணம்:

- நேபாளம் அல்லது பூட்டான் குடியுரிமைச் சான்றிதழை பயன்படுத்தலாம்.
- நேபாளம் | பூடான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
- இந்தியாவில் நேபாள மிஷன் வழங்கிய வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் புகைப்பட அடையாள சான்றிதழை பயன்படுத்தலாம்.
- ராயல் பூட்டானிஸ் மிஷன் வழங்கிய வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் புகைப்பட அடையாள சான்றிதழை பயன்படுத்தலாம்.

மாஸ் பிளான்.. புதிய SIM கார்டு வாங்க புது விதி.. இவங்களுக்கு கட்டாயம்!

பாஸ்போர்ட் விசா: இது தவிர இன்னும், நேபாளம் மற்றும் பூடான் பயணிகள் அறிந்திருக்க வேண்டிய சில விவரங்களும் இங்கு உள்ளன. நேபாளம் மற்றும் பூடான் பயணிகள் வேறு ஏதேனும் நாட்டிலிருந்து வருபவர்கள் என்றால், அவர்கள் செல்லுபடியாகும் விசா முத்திரை ஸ்டாம்ப் உடன், அவர்களது பாஸ்போர்ட்டின் நகலை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களே அவர்களுடைய சொந்த நாட்டில் இருந்து இந்தியா வந்தால் மேற்கூறிய ஆவணங்கள் மட்டும் போதுமானது.

சிம் கார்டு வேலிடிட்டி: DoT அறிவிப்பின்படி, மொபைல் இணைப்பின் செல்லுபடியாகும் காலம் அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் நேரம் வரை செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நேபாளம் | பூடான் பயணிகளின் கையில் உள்ள பாஸ்போர்ட் விசாவின் செல்லுபடியாகும் காலத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் சிம் கார்டு வேலிடிட்டி காலம் பொருந்தும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

3 மாத மட்டுமே வேலிடிட்டி: இதுவொரு புறம் இருக்க, இவர்களுக்கு வழங்கப்படும் சிம் கார்டுகள் 3 மாதங்களுக்கு மட்டுமே அதிகப்படியாக செல்லுபடியாகும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது, இணைப்புகளின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களுக்கு மேல் பயணிகளை இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் கூட 3 மாதங்களுக்கு மேல் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய மொபைல் இணைப்புகளில் சர்வதேச ரோமிங் 3 மாத இறுதியில் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian government updated the KYC norms for issuing mobile SIM cards for Nepal and Bhutan citizen
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X