இனி உங்க படம் இங்க ஓடாது: Loan Appகளுக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு.. "ஒயிட் லிஸ்ட்" தெரியுமா?

|

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதுபோன்ற கடன் பயன்பாடுகளால் துன்புறத்தல் சம்பவங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து நாட்டில் உள்ள சட்டவிரோத/ஆதாரமற்ற கடன் பயன்பாடுகளை ஒடுக்குவதற்கு என மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு நடவடிக்கை

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

லோன் ஆப் ஏஜென்ட்களால் துன்புறத்தல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.

லோன் ஆப் ஏஜென்ட்கள் துன்புறத்தல் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

நாட்டில் உள்ள சட்டவிரோத/ஆதாரமற்ற கடன் பயன்பாடுகளை ஒடுக்குவதற்கு என மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

முறையற்று செயல்படும் லோன் ஆப்ஸ்

முறையற்று செயல்படும் லோன் ஆப்ஸ்

இந்த சட்டவிரோத ஆப்ஸ்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் எதையும் பொருட்படுத்தாமல் கடன்களை வழங்குகின்றன.

மொபைலில் உள்ள தொடர்பு பட்டியலில் தொடங்கி பல முக்கிய அணுகலை வாடிக்கையாளர்களிடம் இருந்து நூதன முறையில் பெருகின்றன.

நீங்கள் பணத்தை திரும்ப தரவில்லை என்றால் உங்களை தவறாக சித்தரித்து உங்களது தொடர்பு பட்டியலில் இருக்கும் எண்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.

இந்த லோன் ஆப்ஸ்கள் வட்டி அடிப்படையிலும் முறையற்று செயல்படுகின்றன.

விரைவில்

விரைவில் "ஒயிட் லிஸ்ட்"

இதுகுறித்து பிபிஐ தளத்தில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நிதி அமைச்சகம் கவலை தெரிவித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து சட்டப்பூர்வ பயன்பாடுகளின் அடிப்படையில் "ஒயிட் லிஸ்ட்" தயார் செய்யும் என்றும் அதற்கு மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

"சட்டவிரோத கடன் பயன்பாடுகள்"

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், "சட்டவிரோத கடன் பயன்பாடுகள்" தொடர்பான பல்வேறு சிக்கல்கள் குறித்து ஒரு கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட்டு அதன்பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர், பொருளாதார விவகாரத்துறை செயலாளர், வருவாய், & பெருநிறுவன விவகாரங்களின் செயலாளர், ஆர்பிஐ அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

சட்டவிரோத கடன் பயன்பாடுகள் அதிகரிப்பு, கடன்கள்/மைக்ரோ கிரெடிட்கள், அதிக வட்டி உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து பயன்பாடுகளையும் ஆராய்ந்து சட்டப்பூர்வமாக செயல்படும் பயன்பாடுகளை "ஒயிட் லிஸ்ட்" பட்டியலில் இணைக்கும் என்றும் அதற்கு மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்பேரில் நடவடிக்கை

மத்திய அரசின் உத்தரவின்பேரில் நடவடிக்கை

ஆர்பிஐ அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகளிடம் இருந்து கடன் வாங்குவதை மக்கள் தவிர்க்கும்படியும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் முன்னதாகவே அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

அதேசமயத்தில் 100-க்கும் மேற்பட்ட முறைகேடான ஆன்லைன் கடன் செயலிகள் மத்திய அரசின் உத்தரவின்பேரில் முன்னதாக நீக்கப்பட்டது.

1500 டிஜிட்டல் கடன் செயலிகள்

1500 டிஜிட்டல் கடன் செயலிகள்

என்பிஎஃப்சியில் பதிவு செய்யப்பட்ட 490 கடன் செயலிகள் உட்பட 1500 டிஜிட்டல் கடன் செயலிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியில் புகார்கள் குவிந்து வருகின்றன.

1509 டிஜிட்டல் கடன் செயலிகளுக்கு எதிராக ஆர்பிஐ-ல் புகார் வந்துள்ளதாகவும் இதில் என்பிஎஃப்சியில் பதிவு செய்யப்பட்ட 490 கடன் செயலிகள் அடங்கும் எனவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

கார்களின் அடிப்படையில் நடவடிக்கை

கார்களின் அடிப்படையில் நடவடிக்கை

கடன் செயலிகள் மீது வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஒழுங்கு படுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னதாக குறிப்பிட்டார்.

2000 லோன் ஆப்ஸ்கள்

2000 லோன் ஆப்ஸ்கள்

கடன் வாங்குபவர்களை துன்புறத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு என கட்டுப்பாடற்ற முறையில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்வதற்கான சில வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாகவே கொண்டு வந்தது.

அதன்படி கூகுள் இந்தியாவில் கடன் வழங்கும் பயன்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியகா கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2000 தனிநபர் கடன் பயன்பாடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீக்கியது.

Best Mobiles in India

English summary
Indian government Taking Strict Action Against Illegal Loan Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X