Home
News

சீனா தலையில் இடி.. இந்திய அரசு அதிரடி.. லேப்டாப் இறக்குமதிக்கு வேட்டு.. அம்பானியின் புது லேப்டாப் காரணமா?

இந்திய அரசாங்கமானது லேப்டாப் (Laptop), டேப்லெட் (Tablet) மற்றும் பிசி (PC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சனல் கம்பியூட்டர் (Personal Computer) இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் (Immediate Effect) என்றும் அறிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதற்கும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபுக் லேப்டாப்பிற்கும் (JioBook Laptop) ஏதேனும் தொடர்பு உள்ளதா? இந்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் சீனவிற்கு (China) விழப்போகும் அடிகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

சீனா தலையில் இடி.. இந்திய அரசு அதிரடி.. லேப்டாப் இறக்குமதிக்கு வேட்டு!

இந்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, "உள்ளூர் உற்பத்தியை (Local Manufacturing) தூண்டும் ஒரு முயற்சியாகவே லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் பெர்சனல் கம்பியூட்டர்களின் இறக்குமதிகள் ஆனது உடனடி நடவடிக்கையாக கட்டுப்படுத்தபட்டு உள்ளது"

கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் பெர்சனல் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிகள் 19.7 பில்லியன் டாலராக (தோராயமாக ரூ.1,62,960 கோடி) இருந்தது. மேலும் நாட்டின் மொத்த சரக்கு இறக்குமதியில் எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதி ஆனது 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உள்ளது.

இதற்கிடையில் இந்திய அரசாங்கம் எடுத்துள்ள "இந்த நடவடிக்கையின் ஆனது இந்திய உற்பத்தியாளர்களுக்கு உந்துதலாக இருக்கும்" என்று எலக்ட்ரானிக்ஸ் துறை அமைப்பான எம்ஏஐடி-யின் (Electronics Industry Body MAIT) முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆன அலி அக்தர் ஜாஃப்ரி ( Ali Akhtar Jafri) கூறி உள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் (Electronics) உட்பட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளை (Production-linked incentives) வழங்குவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனொரு பகுதியாகவே லேப்டாப், டேப்லெட் மற்றும் பிசி இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த திடீர் நடவடிக்கையால் சீனவிற்கு (China) விழப்போகும் அடிகள் என்னென்ன? இந்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை ஆனது இந்திய சந்தையில் தங்கள் லேப்டாப்களை விற்பனை செய்யும் சில முக்கிய நிறுவனங்களான டெல் (DELL), ஏசர் (Acer), சாம்சங் (Samsung), எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics), ஆப்பிள் (Apple), லெனோவா (Lenovo) மற்றும் ஹெச்பி (HP) போன்றவைகளை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட பெரும்பாலான நிறுவனங்கள் கணிசமான சீனாவை தலமாக கொண்ட நிறுவனங்கள் ஆகும். லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின், நாட்டின் மொத்த ஆண்டு இறக்குமதியில் 1.5 சதவீதத்தை உருவாக்குகின்றன, மேலும் அரசாங்கத் தரவுகளின்படி, அவற்றில் கிட்டத்தட்ட பாதி சீனாவிலிருந்து வாங்கப்படுகின்றன.

எனவே உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவ்டிக்கையானது சீனாவிற்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதும் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் இதே காரணத்திற்காகத்தான் மொபைல் போன்கள் போன்ற பொருட்களுக்கு கடந்த காலங்களில் இந்திய அரசாங்கம் அதிக வரிகளை விதித்தது.

இதற்கும் ஜியோபுக் லேப்டாப் அறிமுகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? உண்மையில் இந்த கேள்வியே அபத்தமானது. லேப்டாப் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளும் கடந்த ஜூலை 31 ஆம் தேதியன்று இந்தியாவில் ரூ.16,499 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இரண்டாவது லேப்டாப் ஆன ஜியோபுக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நினைவூட்டும் வண்ணம், ஜியோபுக் லேப்டாப் ஆனது 11.6 இன்ச் டிஸ்பிளே, ஜியோ ஓஎஸ் (JioOS), ஆக்டாகோர் மீடியாடெக் எம்டி 8788 சிப்செட், ஏஆர்எம் மாலி ஜி72 கிராபிக்ஸ் கார்டு, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட், எல்இடி இன்டிகேட்டருடன் 2எம்பி எச்டி கேமரா, 4000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Government Suddenly Restricts Laptop Tablet PC Imports Why and How it Affects China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X