Home
News

நீ கலக்கு சித்தப்பு.. சும்மாவே சுத்தி சுத்தி போட்டோ எடுப்பாங்க.. இப்போ Netflix வேறயா.. புது கூட்டணி!

இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சினிமாட்டிக் ஸ்டோரிடெல்லிங் Cinematic Storytelling) பாணியில், அதாவது "சினிமா கதைசொல்லல்" மூலம் மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் (Ministry of Tourism) ஆனது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) உடன் வணிகரீதியற்ற கூட்டாண்மை யை அறிவித்து உள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை மற்றும் உண்மையான இடங்களை திரை விவரிப்புகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை நிலப்பரப்புகள், கலாச்சார செழுமை மற்றும் பாரம்பரிய தளங்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு காண்பிப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீ கலக்கு சித்தப்பு.. Netflix உடன் புது கூட்டணி!

"சினிமா கதைசொல்லல் மூலம் உலகளவில் இந்திய சுற்றுலா தலங்களை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுலா அமைச்சகம் ஆனது நெட்பிளிக்ஸ் என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் இந்தியா எல்எல்பி (Netflix Entertainment Services India LLP ) உடன் வணிகரீதியற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Non-commercial Memorandum of Understanding) கையெழுத்திட்டதாக சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஆன கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் குஜராத் உட்பட இந்தியா முழுவதும் உள்ள இடங்களை முன்னிலைப்படுத்த நெட்பிளிக்ஸ்க்கு உதவுகிறது. நெட்ஃபிளிக்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் மாநிலம் உட்பட நாட்டின் இயற்கை நிலப்பரப்பு, கலாச்சார மற்றும் பாரம்பரிய தளங்களை மேம்படுத்துவதும் அடங்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் - இந்தியாவின் தெரிவுநிலையை விரிவுபடுத்துவதற்கான ஒரு மென்மையான-சக்தி உத்தியாக இந்த முயற்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக வெளிப்பாடு மற்றும் சமகால கதை சொல்லும் தளங்கள் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் பரந்த முயற்சிகளை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது ஸ்மார்ட்போன்கள் வழியாக ஸ்மார்ட் டிவிகளுக்கு காஸ்டிங் (Casting) செய்யும் திறனை சத்தமின்றி நீக்கியுள்ளது, இதனால் ஆயிரக்கணக்கான நெட்பிளிக்ஸ் பயனர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த மாற்றம் கடந்த சில வாரங்களாக நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது.

சில பயனர்கள் கடந்த மாதம் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இந்த அம்சம் அகற்றப்பட்டதாக கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. முதலில் - நெட்பிளிக்ஸ் இனி ஒரு மொபைல் டிவைஸில் இருந்து பெரும்பாலான டிவிகள் மற்றும் டிவி ஸ்ட்ரீமிங் டிவைஸ்களுக்கு நிகழ்ச்சிகளை காஸ்டிங் செய்வதை ஆதரிக்காது.

நெட்பிளிக்ஸ்-ஐ நேவிகேட் செய்ய உங்கள் டிவி அல்லது டிவி ஸ்ட்ரீமிங் டிவைஸ் உடன் வந்த ரிமோட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஆதரவுப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் - நெட்பிளிக்ஸ் அந்த பகுதியை அகற்றிவிட்டதாக தெரிகிறது.

மேலும் இது க்ரோம்காஸ்ட் 3வது தலைமுறை அல்லது அதற்கு மேற்பட்ட (பிஸிக்கல் ரிமோட் இல்லாமல்), கூகுள் நெஸ்ட் ஹப் ஸ்மார்ட் டிஸ்பிளே, தேர்ந்தெடுக்கப்பட்ட காஸ்ட்-எனேபிள்டு விஜியோ டிவிகள் மற்றும் காம்பல் டிவிகளுக்கு மட்டுமே காஸ்டிங் செய்யும் திறன் ஆதரிக்கப்படும் என்று மீண்டும் நெட்பிளிக்ஸ் ஆதரவு பக்கம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் கஸ்டமர் கேர் பிரதிநிதி ஒருவரை ரத்தின சுருக்கமாக - "ஒரு டிவைஸ்-க்கு அதன் சொந்த ரிமோட் இருந்தால், நீங்கள் காஸ்டிங் செய்ய முடியாது" என்று ஒரு ரெடிட் பயனரிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், சொந்த நெட்பிளிக்ஸ் ஆப் இல்லாத டிவைஸ்களால் இன்னும் காஸ்டிங் செய்ய முடியும் என்பது போல் தெரிகிறது ஆனால் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஆப் ஆதரவுடன் கூடிய பிற பிக் ஸ்க்ரீன் டிவைஸ்களில் பெரும்பாலும் நீங்கள் ரிமோட்டையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Government partnership with Netflix to Boost India Tourism Through Cinematic Storytelling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X