Home
News

பாஸ்போர்ட் அப்ளை.. ஆகஸ்ட் 5 முதல் புதுவிதி.. ஆவணங்கள் வேண்டாம்.. ஆப் மட்டும் போதும்.. எந்த ஆப்?

இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கு (Passport) அப்ளை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் புதிய விதி கொண்டவரப்படுகிறது. இந்த புதிய விதி மூலம் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் பாஸ்போர்ட் அப்ளை செய்ய வேண்டுமென்றால், பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறைகள், விதிகள் இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, ஆவணங்கள் சரிபார்ப்பு மட்டுமே. ஏன்? நீங்கள் கூட பார்போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருக்கும்பட்சத்தில், உங்களது ஆவணங்களில் ஒரு எழுத்து மாறியிருந்தாலும், அதற்காக எவ்வளவு அலைந்து திரிந்திருப்பீர்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பாஸ்போர்ட் அப்ளை புதுவிதி.. ஆவணங்கள் வேண்டாம்.. இந்த ஆப் போதும்!

ஏனென்றால், போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை வைத்து, பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதனால், மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கடுமையாக பின்பற்றுகிறது. அதேவேளையில், பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யும் நடைமுறைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக்கும் பணிகளையும் செய்து வருகிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்போர்ட் நடைமுறைகளை மாற்றி, இ-பாஸ்போர்ட் வழங்கும் பணிகளை துரிதமாக செய்து வருகிறது.

இப்போது, ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஆதார் கார்டுடன் கூடிய டிஜிலாக்கர் ஆப்பை கட்டாயமாக்கி இருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 4) முதல், புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்தால், உங்களிடம் கட்டாயம் டிஜிலாக்கர் ஆப் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதில், உங்களது பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்கள் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ்நாட்டின் சென்னை, மதுரை போன்ற மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும் அடுத்தடுத்து டிஜிலாக்கர் ஆப் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த புதியவிதி மூலம், நீங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யும்போது, முகவரி அல்லது பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் கார்ட்டை சமர்பிக்க விரும்பினால், கட்டாயம் டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து, அந்த ஆப்பில் ஆதார் வெரிபிகேஷன் செய்திருக்க வேண்டும்.

அப்போது, உங்களது ஆதார் கார்டு அந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல், பாஸ்போர்ட்டுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இப்படி செய்துவிட்டால், பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு செல்லும்போது, அசல் ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டியது கிடையாது.

ஆகவே, பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பிஎஸ்கே), அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பிஒபிஎஸ்கே) ஆகிவற்றில், பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் மிகவும் குறைக்கப்படும். இந்த நடைமுறை மிகவும் பாதுகாப்பானதாக மட்டுமல்லாமல், போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பை எளிமையாக தடுக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிலாக்கர் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி? இந்த டிஜிலாக்கர் ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், முதலில் உங்களது ஆதார் கார்டு மற்றும் மொபைல் நம்பர் இணைப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலம் டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதில் ஆப் பயன்படுபாடு மிகவும் எளிதாக இருக்கும். ஆகவே, அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் டிஜிலாக்கர் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு அதை திறந்தால், உங்களது மொபைல் நம்பர் கேட்கப்படும். அதை கொடுத்தப் பின்பு உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபியை கொடுத்துவிட்டால், 6 இலக்க பாஸ்வேர்ட் உருவாக்க வேண்டியிருக்கும். அதையும் கொடுத்துவிட்டால், அக்கவுண்ட் ஓப்பனாகி விடும்.

இப்போது, அதில் மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்டவையின் பக்கங்கள் இருக்கும். அதில், நுழைந்து கேட்கப்படும் தகவல்களை கொடுத்தால், அதில் உங்களது ஆவணங்கள் டிஜிட்டலாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். இந்த டிஜிலாக்கர் ஆப் அரசாங்கத்தின் கீழ் செயல்படுவதால், வருங்காலத்தில் அரசு சார்ந்த ஆவணங்கள் சரிபார்ப்புக்கு இது கட்டாயமாக்கப்படவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Government Mandating DigiLocker Account For Passport Applicants When Submitting Documents
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X