பாரத் 6G அலையன்ஸ் அறிமுகம்.. ரூ.300க்கு 1ஜிபி.. ரூ.10க்கு 1 ஜிபி.. அமைச்சர் சொன்ன அடேங்கப்பா தகவல்!
டிஓடி (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்புத் துறையானது (Department of Telecommunications), அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கு (Next Generation Wireless Technology) உதவும் பாரத் 6ஜி அலையன்ஸ் (Bharat 6G Alliance) என்கிற கூட்டுத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிஜி6ஏ (B6GA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் 6ஜி அலையன்ஸ் என்பது பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தரநிலை மேம்பாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத்தளம் ஆகும். பாரத் 6ஜி அலையன்ஸிற்கான பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்வால் (Ashwini Vaishnaw) நேற்று (ஜூன்.3) அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் 6ஜி அலையன்ஸ் ஆனது 2ஜியில் இருந்து 3ஜி-க்கு பின்னர் 4ஜிக்கு மாறி, இப்போது 5ஜிக்கு மாறிவரும் மொபைல் சேவைகளை 6ஜி-ஐ நோக்கி நகர்த்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, பாரத் 6ஜி அலையன்ஸ் ஆனது மற்ற 6ஜி குளோபல் அலையன்ஸ்களுடன் (6G Global Alliances) கூட்டணிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை உருவாக்கும். பின்னர் 6ஜி-யின் தொழில்நுட்ப தேவைகளை மட்டுமின்றி 6ஜி தொடர்பான வணிகம் மற்றும் சமூகத் தேவைகளையும் புரிந்துகொள்ளும்.
அந்த புரில்களின் வழியாக ஒருமித்த கருத்தை வளர்ப்பது மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Open research and development) தொடர்பான முன்முயற்சிகள் செயல்படுத்தப்படும். ஓட்டுமொத்தமாக, பிஜி6ஏ ஆனது, இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் அறிமுகத்தை துரிதப்படுத்தும்.
பாரத் 6ஜி அலையன்ஸ் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கடந்த ஒன்பது ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் தொடர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம், தற்போது இந்தியா பின்பற்றும் தொழில்நுட்பத்தின் பாதையை உலகமே பின்பற்றுகிறது" என்று கூறினார்.
மேலும் கடந்த 9 வருடங்களில் மொபைல் டேட்டாவிற்கான செலவு எந்தளவு குறைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். "கடந்த 2014 ஆம் ஆண்டில் 1 ஜிபி டேட்டாவிற்கு ரூ.300செலவானது. தற்போது 2023 ஆம் ஆண்டில் 1ஜிபி டேட்டாவின் விலை ரூ.10 ஆக உள்ளது!" என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் விளைவாக, இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும், மேலும் இந்த மாற்றம் "வளர்ந்த இந்தியாவிற்கான" ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் கடந்த 2022 அக்டோபரில் இருந்து அதிவேக 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றனர். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலத்தில் இந்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடி கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








