BGMI கதை முடிந்தது! கன்ஃபார்ம் செய்து காரணத்தை சொன்ன இந்திய அரசு!

|

BGMI என்கிற "மாறுவேடத்தில்" மீண்டும் இந்தியாவிற்குள் வந்த PUBG கேமிற்கு இந்திய அரசாங்கம் "மீண்டும்" வேட்டு வைத்துள்ளது.

அதாவது Battlegrounds Mobile India என்கிற பெயரில் இந்தியாவில் அறிமுகமான பப்ஜி கேமின் இந்திய வெர்ஷன்-ஐ நாட்டில் தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பதையும் இந்திய அராசாங்கம் வெளிப்படுத்தி உள்ளது.

அரசாங்கம் சொல்லுச்சு.. நாங்க செஞ்சோம் - கூகுள் ஓப்பன் டால்க்!

அரசாங்கம் சொல்லுச்சு.. நாங்க செஞ்சோம் - கூகுள் ஓப்பன் டால்க்!

முன்னதாக (இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜூலை 28 ஆம் தேதி மாலை) BGMI கேம் ஆனது Google Play Store மற்றும் Apple App Store இலிருந்து திடீரென்று நீக்கப்பட்டது.

பிஜிஎம்ஐ கேம் ஆனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், "அரசாங்க உத்தரவின் கீழ் தான் இதை செய்தோம்" என்று கூகுள் விளக்கம் அளித்திருந்தது. ஆனாலும் கூட இந்திய அரசாங்கம் இது குறித்து வாய் திறக்காமலேயே இருந்தது.

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

"தூக்கப்பட்ட" 24 மணி நேரம் கழித்து காரணம் சொன்ன இந்திய அரசு!

பிஜிஎம்ஐ தடை குறித்த ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் 'டிரெண்ட்' ஆகியும் கூட, இந்த தடைக்கு பின்னால் உள்ள உண்மையான நிஜமான காரணம் என்ன என்பது ஒரு மர்மமாகவே இருந்தது.

தற்போது 24 மணி நேரம் கழித்து, அந்த சந்தேகத்தை இந்திய அரசாங்கமே தீர்த்து வைத்துள்ளது.

"தேசிய பாதுகாப்பு" காரணங்களுக்காகவே பிஜிஎம்ஐ கேம்-ஐ நாட்டில் தடை செய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கம் போல சீனாவிடம் சேர்ந்து திருட்டு வேலை?

வழக்கம் போல சீனாவிடம் சேர்ந்து திருட்டு வேலை?

பிஜிஎம்ஐ கேம் ஆனது சீனாவுடன் 'டேட்டாக்களை' பகிர்ந்து கொள்கிறது என்கிற கவலையின் விளைவாகவே இந்த தடை வந்துள்ளதாகவும் ஒரு அரசாங்க சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் பிரிவு 69ஏ-வை பயன்படுத்தி, கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 118 ஆப்களுக்கான பொது அணுகலை இந்திய அரசாங்கம் தடுத்தது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த Battlegrounds Mobile India கேம்-ஐ தடை செய்யவும் "அதே சட்டங்கள்" தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 69A பிரிவு குறித்து அரசாங்கம் பகிரங்கமாக எந்த கருத்தையும் இதுவரை பகிரவில்லை.

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

நீங்கள் BGMI பிரியர்-ஆ? அல்லது வெறியர்-ஆ?

நீங்கள் BGMI பிரியர்-ஆ? அல்லது வெறியர்-ஆ?

பிரியர் ஆக இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. இது வெறும் ஒரு கேம் தான். இது இல்லை என்றால் என்ன வேறொரு கேம்-ஐ டவுன்லோட் செய்து விளையாடிக்கொள்ளலாம்.

ஒருவேளை நீங்களொரு BGMI வெறியர் ஆக இருந்தால், கொஞ்சம் சிக்கல் தான். ஏனெனில் சமீபத்தில், ஒரு 16 வயது சிறுவன் தன் தாயை கொலை செய்துள்ளான். எதற்காக என்று தெரியுமா? ஆன்லைன் கேம் விளையாடியதற்காக திட்டியதால், தன் தாயை அவன் சுட்டுக் கொன்றுள்ளான்!

கூலாக இருங்க.. இருக்கவே இருக்கு பல ஆல்டர்நேட்டிவ் கேம்ஸ்!

கூலாக இருங்க.. இருக்கவே இருக்கு பல ஆல்டர்நேட்டிவ் கேம்ஸ்!

ஒருவேளை நீங்கள் Battlegrounds Mobile India எனப்படும் BGMI கேமிற்க்கான "மாற்று" கேம்களை ஏற்கனவே தேட ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு ஏன் அந்த சிரமம்?

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அணுக கிடைக்கும் 'பெஸ்ட் பிஜிஎம்ஐ ஆல்டர்நேட்டிவ் கேம்'களின் பட்டியல் இதோ:

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

01. நியூ ஸ்டேட் மொபைல் (New State Mobile)

01. நியூ ஸ்டேட் மொபைல் (New State Mobile)

நியூ ஸ்டேட் மொபைல் என்பது கிராஃப்டன் இன்க் நிறுவனத்தின் மற்றொரு கேம் ஆகும், இது "வேறு சகாப்தத்தில்" உருவாக்கப்பட்ட BGMI-ஐ போன்றதொரு கேம் ஆகும்.

இதிலும் பல்வேறு வகையான வரைபடங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் அணுக கிடைக்கும், ஆனால் அது எல்லாமே வருங்காலத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

பிஜிஎம்ஐ உடன் ஒப்பிடுகையில், இந்த கேமின் கிராபிக்ஸ் சற்று கூடுதலாக மெருகூட்டப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

பிஜிஎம்ஐ பிளேயர்கள், இந்த நியூ ஸ்டேட் மொபைல் கேமை விளையாடும் போது, வேறொரு கேமை விளையாடுகிறோம் என்கிற உணர்வை பெறவே மாட்டார்கள், அந்த அளவிற்கு இது BGMI உடன் ஒற்றுப்போகும்!

02. கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty Mobile)

02. கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty Mobile)

பிரபலத்தன்மையின் அடிப்படையில் BGMI க்கு நிகரான ஒரு கேம் என்றால் அது Call of Duty Mobile தான். இந்த கேம் அதன் சொந்த ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது.

BGMI உடன் ஒப்பிடும்போது "அந்த கூட்டம்" சிறியதாக இருக்கலாம், ஆனால் தற்போது பிஜிஎம்ஐ தடை செய்யப்பட்டுள்ளதால் கால் ஆஃப் டூட்டி மொபைல், ஒரு நல்ல மாற்று கேம் ஆக இருக்கும்.

இந்த Android மற்றும் iOS ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

03. அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் (Apex Legends Mobile)

03. அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் (Apex Legends Mobile)

இந்த பட்டியலில் Apex Legends Mobile கேம் மிகவும் புதியது. பிசி மற்றும் கன்சோல் "உலகில்" விருதுகளை வென்ற இந்த கேம், தற்போது மொபைல் கேமிங் பிரிவிலும் ஆட்சி செய்ய தயாராக உள்ளது.

ஏனெனில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது BGMI உடன் ஒப்பிடப்படுகிறது. இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளின் காரணமாக அல்ல, திறன் காரணமாக!

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் ஆனது லெஜண்ட்ஸ் சம்பந்தப்பட்ட தனித்துவமான கேம் பிளேவை வழங்குகிறது. ஒவ்வொரு லெஜண்ட்டிற்கும் வெவ்வேறு திறன்கள் உள்ளன, அதில் நீங்கள் நிபுணத்துவமும் பெறலாம்.

04. கரேனா ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் (Garena Free Fire Max)

04. கரேனா ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் (Garena Free Fire Max)

கடந்த 2020 ஆம் ஆண்டில் PUBG மொபைலின் மீதான தடைக்கு பின்னர் Garena Free Fire Max கேம்-ஐ கையில் பிடிக்கவே முடியவில்லை; அந்த அளவிலான வரவேற்பை பெற்றது. எனவே பிஜிஎம்ஐ-க்கு சரியான மாற்றாக இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.

Photo Courtesy: BGMI, Google Play Store

Best Mobiles in India

English summary
Indian Government Confirmed BGMI Ban Here is the Reason and Top Best Alternative Mobile Games To Try

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X