இனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன? மத்திய அரசு கேட்ட பட்டியல்!

|

இறக்குமதி செய்யும் சீன பொருட்களின் பட்டியலை சமர்பிக்கும்படி தொழில்துறையிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் என இருபிரிவுகளாக பிரித்து சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ராணுவம் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவம் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவம் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

மர்மமான வெடிப்புகள்! பிரபஞ்சம் முழுவதும் கேட்கும் தாளம்..!மர்மமான வெடிப்புகள்! பிரபஞ்சம் முழுவதும் கேட்கும் தாளம்..!

இந்தியா சீனா இடையிலான உறவு

இந்தியா சீனா இடையிலான உறவு

அதேபோல் இந்தியா சீனா இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. லடாக் பிரச்சனைக்கு பின் இரண்டு நாட்டு உறவு மீண்டும் சரியாக வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்தியா சீனா ரஷ்யா

இந்தியா சீனா ரஷ்யா

இந்த நிலையில் இந்தியா சீனா ரஷ்யா இடையிலான மூன்று நாட்டு ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தியா சீனா ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல்

இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல்

இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல்நீடித்து வரும் நிலையில் சீன உபகரணங்களை உபயோகப்படுத்தப்போவதில்லை என சீன நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் உத்திரபிரதேச மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்கு என சீன நிறுவனத்திடம் மேற்கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்

சீனாவில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்

அதேபோல் சீனாவில் இருந்த இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பட்டியலை வழங்கும்படி தொழில்துறையிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது இரண்டு பிரிவுகளாக அதாவது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் என இரண்டு பிரிவுகளா பிரித்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்

மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்

மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் எனவும் இந்திய நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிதின்கட்காச சூசகமாக தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தொடரும்படியும் அத்தியாவசியமற்ற பொருட்களை உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்ய அரசு திட்டமிடும் என தெரிகிறது.

வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!

செல்போன்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள்

செல்போன்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள்

இதில் கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், ஹேர் கிரீம், ஹேர் ஷாம்புகள், ஃபேஸ் பவுடர் உள்ளிட்ட மேக்-அப் பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்களை உருவாக்கங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஒரு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் 14 விழுக்காடு பொருட்களில் செல்போன்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், மின்சக்தி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Indian Government asks list of cheap imports from industry sources said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X