20 வயது இந்திய பெண்ணுக்கு 22 லட்சம் வழங்கிய மைக்ரோசாப்ட்.. எதற்கு தெரியுமா?

|

மைக்ரோசாப்டின் அசூர் கிளவுட் சிஸ்டத்தில் ஒரு பிழையைக் கண்டறிந்ததற்காக டெல்லியைச் சேர்ந்த 20 வயது ஹேக்கரான அதிதி சிங்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 30,000 டாலரை பரிசாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பின்படி இது சுமார் ரூ .22 லட்சம் வெகுமதி ஆகும். மைக்ரோசாப்ட் அசூர் கிளவுட் இல் இவர் கண்டுபிடித்த பிழைக்காக இந்த பரிசை அதிதி சின் வென்றுள்ளார்.

ரிமோட் கோட் எக்ஸிகியூஷன் (ஆர்.சி.இ) பிழையை கண்டுபிடித்த இந்திய பெண்

ரிமோட் கோட் எக்ஸிகியூஷன் (ஆர்.சி.இ) பிழையை கண்டுபிடித்த இந்திய பெண்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் இதேபோன்ற பிழையைக் கண்டறிந்து சுமார் 7500 டாலரை வெகுமதியை அதிதி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு தொகை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ .5.5 லட்சத்துக்கு மேல் ஆகும். அதிதி இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ரிமோட் கோட் எக்ஸிகியூஷன் (ஆர்.சி.இ) பிழை இருப்பதாகக் கூறுகிறார். இது ஒப்பீட்டளவில் புதியது மற்றும் தற்போது இந்த பிழை மீது எந்த நிறுவனமும் அதிக கவனம் செலுத்தவில்லை.

பிழை குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தெரிவித்த அதிதி

பிழை குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தெரிவித்த அதிதி

இத்தகைய பிழைகள் மூலம், ஹேக்கர்கள் உள் அமைப்புகள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் தகவல்களை அணுக வழியுள்ளது என்பதனால் இந்த பிழை குறித்து அதிதி நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார். பிழைகளை எளிதில் கண்டுபிடிப்பது சாதாரணம் அல்ல என்றும், நெறிமுறை ஹேக்கர்கள் புதிய பிழைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிதி குறிப்பிடுகிறார்.

வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? சுலபமான டிப்ஸ்..வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? சுலபமான டிப்ஸ்..

ஹேக்கிங்கைப் பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்

ஹேக்கிங்கைப் பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்

அப்படி புதிய பிழைகள் குறித்த அப்டேட் அறிவுடன் இருப்பதனால் மட்டும் தான் புகாரளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பிழைகளைக் கண்டுபிடிப்பதற்குத் தகுதியுடைய ஹேக்கராக வேண்டும் என்றால், நிச்சயமாகப் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல், அறிவைப் பெறுவதற்கும், நெறிமுறை ஹேக்கிங்கைப் பற்றி முதலில் கற்றுக்கொள்வதும் தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

மைக்ரோசாப்ட் இன்னும் முழுமையாகச் சரிசெய்யவில்லை

மைக்ரோசாப்ட் இன்னும் முழுமையாகச் சரிசெய்யவில்லை

"மைக்ரோசாப்ட் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கண்டறிந்த பிழையை மட்டுமே சரிசெய்தது. அவை அனைத்தையும் அவர்கள் இன்னும் முழுமையாகச் சரிசெய்யவில்லை, "என்று ஆர்.சி.இ பிழையைக் கண்டறிந்த அதிதி கூறியுள்ளார். தொழில்நுட்ப நிறுவனமான அதன் பாதுகாப்பற்ற பதிப்பை யாராவது பதிவிறக்கம் செய்திருக்கிறார்களா என்று சோதித்துப் பார்க்கும்போது பதிலளிக்க இரண்டு மாதங்கள் பிடித்தன என்று கூறினார்.

பவுண்டி ஹண்டர்களுக்கு அறிவுரை

பவுண்டி ஹண்டர்களுக்கு அறிவுரை

ஒரு பிழையைக் கண்டுபிடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் அந்த நிறுவனத்தின் ஆதரவுக் குழுவிடம் அவர்கள் ஒரு பவுண்டி திட்டத்தை ஹோஸ்ட் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும் என்றும், அத்தகைய திட்டத்தைப் பற்றி அந்த நிறுவனம் உறுதிப்படுத்தினால், அதற்குப் பின்னர் பவுண்டி ஹண்டர்கள் பிழையைக் கண்டுபிடிப்பதற்கான செயல்களைச் செய்து உங்கள் முயற்சியில் முன்னேற வேண்டும் என்றும் அதிதி அறிவுறுத்துகிறார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian girl gets over Rs 22 lakh bounty from Microsoft for finding bug : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X