கால் டிராப் பிரச்சனையை சரிசெய்ய இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய சிப்செட்.!

இந்த பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

|

புதிய தொழில்நுட்பம் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்திய டெலிகாம் சந்தையில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் முதல்
எலெக்டிரானிக் சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் நிறுவனம் தற்சமயம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கால் டிராப் பிரச்சனையை சரிசெய்ய இந்தியாவில் உருவாக்கப்பட்டசிப்செட்.!

குறிப்பாக கால் டிராப் பிரச்சனை மற்றும் 5ஜி இணைப்புக்களில் இந்த புதிய சிப்செட் முக்கிய பங்காற்றும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமிகன்டக்டர்

செமிகன்டக்டர்

இதுவரை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்துவித மின்னனு சிப்செட்களும் வெளிநாட்டு நிறுவனங்கள்
உருவாக்கியவை ஆகும். பின்பு இந்தியாவில் செமிகன்டக்டர் உற்பத்தி ஆலை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தென் கொரியா

தென் கொரியா

மேலும் சான்க்யா லேப்ஸ் பயன்படுத்தும் சிப்செட் மாடல்கள் தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பு இந்த புதிய சிப்செட் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து வீடியோ தரவுகளை பிரிக்கும் என்பதால் அழைப்பு தரம் உயரும் என்றும் சான்க்யா லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் பராக் நாயக் தெரிவித்தார்

வீடியோ டிரான்ஸ்மிஷன்

வீடியோ டிரான்ஸ்மிஷன்

சான்க்யா லேப்ஸ் கொண்டுவந்துள்ள பிரித்வி 3 சிப்செட் மொபைல் போன்களில் நேரடி வீடியோ டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாட்டிலைட் போனாப மாற்றும் திறன் கொண்டுள்ளது.

 மனோஜ் சின்கா

மனோஜ் சின்கா

இந்த பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிப்செட் சார்ந்த மொபைல் போன் உபகரணங்களை மற்றும் டாங்கிள் வடிவிலும் மொபைல் போன்களாகவும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நாயக் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Indian firm makes electronic chip to help curb call drop, facilitate 5G: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X