இந்திய வளர்ச்சியை யூட்யூபில் பார்க்கலாம் : மத்திய அரசு அதிரடி.!!

By Meganathan
|

இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலை மத்திய நிதி அமைச்சர் அருன் ஜெய்ட்லீ துவக்கி வைத்தார். இதன் மூலம் கண நேரத்தில் நிதி அமைச்சகம் சார்ந்த தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வளர்ச்சியை யூட்யூபில் பார்க்கலாம் : மத்திய அரசு அதிரடி.!!

மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் தகவல்களை இனி யூட்யூப் மூலம் பார்க்க முடியும் என அருன் ஜெய்டலீ தெரிவித்தார். இந்த சேனல் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளின் மூலம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வளர்ச்சியை யூட்யூபில் பார்க்கலாம் : மத்திய அரசு அதிரடி.!!

இந்த புதிய முறையானது அரசு அறிவிப்புகள் மற்றம் நடவடிக்கைகளை வீடியோ மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சேனலில் முக்கிய திட்டங்கள் சார்ந்த வீடியோகள், அரசு நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், பத்திரிக்கை சந்திப்பு மற்றும் பல நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வளர்ச்சியை யூட்யூபில் பார்க்கலாம் : மத்திய அரசு அதிரடி.!!

யூட்யூப் சேனல் மூலம் மத்திய அரசின் ஆன்லைன் முகம் தெளிவாக புலப்படும் என்றும் பெரும்பாலான தகவல்கள் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் என்பதால் மத்திய அமைச்சகத்தின் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian Finance Ministry launches its official YouTube channel Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X