9.3மில்லியன் டாலர் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டெஸ்லா பணியாளர்!

டெஸ்லா நிறுவனம் எஸ்.எச்.டபில்யூ(Schwabische Huttenwerke Automotive GmbH -SHW) நிறுவனத்துடனான சப்ளையர் உறவை துண்டித்துள்ளதாக 2017 ஜனவரியில் அறிந்தார்.

|

32 வயதான இந்தியரும், அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் முன்னாள் பணியாளருமான சலீல் பருலேகர் என்பவர், நிறுவனத்தின் நிதி ஆவணங்களில் மோசடி செய்து, ஒரு சப்ளையரிடம் இருந்து மற்றொன்றுக்கு பணத்தை மடைமாற்றி, 9.3மில்லியன் டாலர் திருடியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது 9 மின்னணு மோசடி மற்றும் 1 மோசமான அடையாள திருட்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு மின்னணு மோசடிக்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 250,000 டாலர் அபராதம் விதிக்கப்படும். அடையாள திருட்டிற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை மற்றும் 250,000 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

9.3மில்லியடாலர் கையாடல்:குற்றஞ்சாட்டப்பட்டுள்ளடெஸ்லா டெஸ்லா பணியாளர்!

பெடரல் கிராண்ட் ஜூரி கடந்தவாரம் சலீல்க்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்தி மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக, அமெரிக்க அட்டர்னி அலெக்ஸ் மற்றும் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன்(எப்.பி.ஐ) சிறப்பு ஏஜென்ட் ஜான் பென்னெட் கூறியுள்ளார்.

அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2016-2017 காலகட்டத்தில் இந்த மோசடி திட்டத்தை டெஸ்லா நிறுவனத்தில் அரங்கேற்றியுள்ளார் சலீல். அப்போது சலீல் டெஸ்லா நிறுவனத்தின் குளோபல் சப்ளை மேனேஜ்மென்ட் குரூப்-ல் பணியாற்றி வந்துள்ளார். டெஸ்லா ஆட்டோமொபைல்ஸ் சம்பந்தப்பட்ட பல்வேறு கருவிகள் மற்றும் சேவைகள் பெறும் குறிப்பிட்ட சப்ளையர்களின் தொடர்புகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பாளியாக இருந்துள்ளார். அந்த பதவியை பயன்படுத்தி, ஒரு டெஸ்லா சப்ளையருக்கு சொந்தமான பணத்தை மற்றொரு சப்ளையருக்கு செல்லும்படி ஒரு திட்டத்தை துவக்கியுள்ளார்.இதன் மூலம் சுமார் 9.3மில்லியன் டாலர் கையாடல் செய்துள்ளார்.

9.3மில்லியடாலர் கையாடல்:குற்றஞ்சாட்டப்பட்டுள்ளடெஸ்லா டெஸ்லா பணியாளர்!

டெஸ்லா நிறுவனம் எஸ்.எச்.டபில்யூ(Schwabische Huttenwerke Automotive GmbH -SHW) நிறுவனத்துடனான சப்ளையர் உறவை துண்டித்துள்ளதாக 2017 ஜனவரியில் அறிந்தார். அப்போது, எஸ்.எச்.டபில்யூ நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாதிரி பொருட்களை மட்டுமே டெஸ்லாவிற்கு அளித்துள்ள்து. தொடர்பை துண்டிக்கும் போது எதிர்கால பணபரிமாற்றங்களை டெஸ்லா நிறுத்திவைக்கும் என்பது சலீலுக்கு தெரிந்திருந்தது மற்றும் இந்த முடிவை மாற்ற அவருக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் சில பணபரிமாற்றங்களை மற்றொரு சப்ளையரான ஹோடா நிறுவனத்திற்கு(Hota Industrial Manufacturing)அனுப்பு, அவர்கள் மூலம் எஸ்.எச்.டபில்யூ நிறுவனத்திற்கு பணத்தை பரிமாற்ற வைத்துள்ளார். எனவே இரசீதுகளில் மோசடி செய்து பணபரிமாற்றங்களை மடைமாற்றி விட்டது, போலியான வங்கி கணக்கு , ஹோடா பணியாளர் போல ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஹோடோ பணியாளர்களின் அடையாளங்களை திருடி, ஆள்மாறாட்டம் செய்துள்ளார் மற்றும் ஹோடா, எஸ்.எச்.டபில்யூ வங்கிகணக்கு தகவல்களை டெஸ்லா கணக்குகளில் மாற்றியுள்ளார் சலீல்.

9.3மில்லியடாலர் கையாடல்:குற்றஞ்சாட்டப்பட்டுள்ளடெஸ்லா டெஸ்லா பணியாளர்!
சலீல் மும்பை பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் நார்த் கரோலினா ஸ்டேட் பல்கலைகழகத்தில் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் முதுகலை பட்டமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

English summary
Indian ex-Tesla employee charged in $9.3 million embezzlement scheme : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X