சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!

|

எல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டம் காரணமாக, இந்திய மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், பல இந்திய மக்கள், இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வலைத்தளத்தில் இந்திய பிராண்ட்களை தேடிவருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் மாடல் மற்றும் பிராண்ட்களை உங்களுக்காக பட்டியலிட்டுளோம்.

மேட் இன் இந்தியா இயர்போன் பட்டியல்

மேட் இன் இந்தியா இயர்போன் பட்டியல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த இயர்போன்ஸ் தயாரிப்புகளை வழங்க கூடிய சிறந்த இந்திய நிறுவனங்கள் நமது நாட்டிலேயே உள்ளது. இந்த இந்திய இயர்போன்ஸ் பிராண்டுகள் அவற்றின் பயனர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் தரம்வாய்ந்த இயர்போன்ஸ் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும்.

போர்ட்ரானிக்ஸ் (Portronics)

போர்ட்ரானிக்ஸ் (Portronics)

டெல்லியை தலைமையக கொண்ட போர்ட்டோனிக்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஒரு முன்னணி கேஜெட்டு பிராண்டாகும், இது கடந்த 10 ஆண்டுகளில் கேட்ஜெட்ஸ் சந்தையில் பரவலாக தனது முன்னேற்றத்தை காட்டி வருகிறது. இந்த பிராண்ட் பல எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பொருட்களை வழங்குகிறது.

Google அதிரடி அறிவிப்பு! 'இதை' எப்பவோ செஞ்சு இருக்கனும் ஆனா கொஞ்சம் லேட்!Google அதிரடி அறிவிப்பு! 'இதை' எப்பவோ செஞ்சு இருக்கனும் ஆனா கொஞ்சம் லேட்!

போர்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள்

போர்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள்

ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களுக்கான நம்பகமான பல தயாரிப்புகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்த இந்திய நிறுவனம் ஆண்டுக்கு குறைந்தது 50% வளர்ச்சியைக் கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீப்ரானிக்ஸ் (Zebronics)

ஜீப்ரானிக்ஸ் (Zebronics)

இயர்போன்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை தயாரிக்கும் மற்றொரு இந்திய நிறுவனம் தான் ஜீப்ரானிக்ஸ். இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது. ஆடியோ, கணினி சாதனங்கள், கணினி பாகங்கள், கண்காணிப்பு கேமராகள், கேமிங் மற்றும் பவர் சொல்யூஷன்ஸ் போன்ற துறைகளில் இந்நிறுவனம் நன்கு செயல்பட்டுவருகிறது. வயர்டு இயர்போன்ஸ் முதல் வயர்லெஸ் நெக் பேண்டுகள் வரை அனைத்தையும் தயாரிக்கிறது.

எவிட்சன்(Evidson)

எவிட்சன்(Evidson)

'மேக் இன் இந்தியா' இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது நிறுவப்பட்ட ஒரு இந்திய நிறுவனம் தான் எவிட்சன். இந்த இந்திய நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எவிட்சன் பலவிதமான இயர்போன்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்ஸ் சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது.

சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!

ஐபால் (iball)

ஐபால் (iball)

ஐபால் என்பது இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு தொழில்நுட்ப துணை பிராண்ட் ஆகும், இது 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐபால் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் பலரால் நம்பப்படுகிறது. இந்நிறுவனம் பல வகையான இயர்போன்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்களை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. குறைந்த விலையில் னால தரமான சாதனங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

சிக்னேச்சர் அகஸ்டிக்ஸ் (Signature Acoustics)

சிக்னேச்சர் அகஸ்டிக்ஸ் (Signature Acoustics)

சிக்னேச்சர் அகஸ்டிக்ஸ் நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் கேப்டன் கவுதம் பானர்ஜி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த பிராண்ட் விரைவாக தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் மும்பையில் அமைந்துள்ளது.இது பல பயனர்களால் நம்பப்படும் பலவிதமான இயர்போன்ஸ் மாடல்களை கொண்டுள்ளது. இந்திய தயாரிப்புகளின் கீழ் இயர்போன்ஸ் வாங்க விரும்பும் பயனர்கள் இந்த நம்பகமான பிராண்ட்களை கணக்கில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Indian Earphones Lists And Made In India Brands You Should Know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X