இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் மொபைல் மற்றும் டேப்லெட் டாப்!!!
மொபைல் மற்றும் டேப்லெட் தான் இப்பொழுது ஆன்லைனில் விற்பனையாகும் பொருள்களில் டாப் லெவலில் உள்ளன. புதிதாக உருவாகும் பேப்லெட்களும் இதில் வளர்ந்து வருகின்றன. இந்த பொருள்கள் ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வருவதாக கூகுள் இந்தியா ஸ்டடியின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஐநக்ஸூ(Inuxu) என்ற டிஜிட்டல் மீடியா டெக்னாலஜி கம்பெனி தி இந்தியன் இ-கன்சியுமர் மொபைல் / டேப்லெட் லேன்ட்ஸ்கேப்(‘The Indian e-consumer mobile / tablet landscape') என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
எந்தெந்த நிறுவனங்களின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகள் டாப் லெவலில் உள்ளன, எந்தெந்த நிறுவனம் ஆன்லைன் மொபைல் மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னிலையில் உள்ளன என்று அந்த ஆய்வின் அறி்க்கையில் வெளியிடப்பட்டது.
எந்தெந்த நிறுவனங்கள் சவால் அளி்ககும் விதமாக வளர்ந்து வருகின்றன, எந்தெந்த நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி பாதையில் இருந்து கீழே செல்கின்றன என்ற தகவலும் இந்த அறிக்கையில் உள்ளது.
மொபைல் நிறுவனங்களை பொறுத்த வரையில் சாம்சங் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ஆப்பிள் இரண்டாவது இடத்திலும் மற்றும் நோக்கியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மக்களால் அதிகம் ஆன்லைனில் தேடபட்ட மொபைல் மாடல்களில் நோக்கியா லூமியா 920 முதல் இடத்திலும் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 3ஜி மற்றும் ஐபோன் 4 இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நோக்கியா, சோனி மற்றும் ஹச்டிசி ஆகிய நிறுவனங்கள் சவால் விடும் விதமாக வளர்ந்து வருகின்றன. பிளாக்பெரி மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்கின்றன.
டேப்லெட் நிறுவனங்களை பொறுத்த வரையில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. சாம்சங் இரண்டாவது இடத்திலும் மற்றும் மைக்கிரோமேக்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மக்களால் அதிகம் ஆன்லைனில் தேடபட்ட டேப்லெட் மாடல்களில் சாம்சங் காலக்ஸி மாடல் டேப்களே முதல் மூன்று இடத்திலும் உள்ளன. ஆப்பிளின் ஐபேட் 4வது இடத்தில் உள்ளது.
சாம்சங், மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் ஆகிய நிறுவனங்கள் சவால் விடும் விதமாக வளர்ந்து வருகின்றன. ஹச்சிஎல் மற்றும் லினோவோ போன்ற நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்கின்றன.
மே 2013 முதல் ஜூலை 2013 வரை கோபுரோபோ (www.goProbo.in) என்ற இந்தியன் வெப்சைட்டில் பதிவான தகவலின் அடிப்படையில் ஐநக்ஸூ கம்பெனி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐநக்ஸூ கம்பெனி புனேவை தலைமையிடமாக கொண்ட டிஜிட்டல் மீடியா டெக்னாலஜி கம்பெனியாகும். இந்த கம்பெனியை [email protected]ல் தொடர்புகொள்ளலாம். இந்த கம்பெனியின் வெப்சைட் www.inuxu.com மற்றும் டிவிட்டர் @inuxu_twts.
இந்த அறிக்கையின் இன்போ கிராப்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For New Smartphones Photos Gallery

ஆன்லைன்
சாம்சங் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ஆப்பிள் இரண்டாவது இடத்திலும் மற்றும் நோக்கியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆன்லைன்
நோக்கியா லூமியா 920 முதல் இடத்திலும் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 3ஜி மற்றும் ஐபோன் 4 இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஆன்லைன்
நோக்கியா, சோனி மற்றும் ஹச்டிசி ஆகிய நிறுவனங்கள் சவால் விடும் விதமாக வளர்ந்து வருகின்றன.

ஆன்லைன்
பிளாக்பெரி மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்கின்றன.

ஆன்லைன்
ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. சாம்சங் இரண்டாவது இடத்திலும் மற்றும் மைக்கிரோமேக்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆன்லைன்
சாம்சங் காலக்ஸி மாடல் டேப்களே முதல் மூன்று இடத்திலும் உள்ளன. ஆப்பிளின் ஐபேட் 4வது இடத்தில் உள்ளது.

ஆன்லைன்
சாம்சங், மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் ஆகிய நிறுவனங்கள் சவால் விடும் விதமாக வளர்ந்து வருகின்றன.

ஆன்லைன்
ஹச்சிஎல் மற்றும் லினோவோ போன்ற நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்கின்றன.

ஆன்லைன்
ஐநக்ஸூ(Inuxu)
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications