இந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் உலகளவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

டாலர்களை சன்மானமாக

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் `Sign in with Apple' அம்சத்தில் இருக்கும் பிழையைச் சுட்டிக்காட்டி சரிப்படுத்திய இந்தியாவைச் சேர்ந்த பவுக் ஜெயின் என்பவருக்கும் 1லட்சம் டாலர்களை சன்மானமாக வழங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

 பெரிய வித்தியாசமாகப் பார்க்கப்படுவது

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கும் உள்ள பெரிய வித்தியாசமாகப் பார்க்கப்படுவது ஆப்பிள் கொடுக்கும் தகவல் பாதுகாப்புதான். அதன்படி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு (Data Security)விஷயங்களில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் கவனமாக இருக்கும் அப்படியும் சில கோளாறுகள் அல்லது ஓட்டைகள் இருக்கலாம், அதனால் அதைக்

கண்டறிந்து சரிசெய்துகொள்வது மிகவும் முக்கியம்.

சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?

 பல்வேறு டெக் நிறுவனங்களும்

அதற்காகத்தான் இந்நிறுவனம் பக் பவுன்டி(bug bounty)என்ற போட்டியை நடத்தி முக்கியப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு

சன்மானம் அளிக்கும். பல்வேறு டெக் நிறுவனங்களும் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுகிறது.

என்ற அம்சத்தை

அன்மையில் 'Sign in with Apple' என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். புதிய ஆப்களில் கணக்கு தொடங்குவதற்கு 'Sign in with Google'போல ஆப்பிள் பயனாளர்கள்'Sign in with Apple'ஆப்ஷனைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஆப்பிள் கணக்கு மூலம் லாகின் செய்தால் உங்களது முக்கியத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்

என்றது ஆப்பிள் நிறுவனம்.

(இந்திய மதிப்பில் சுமார் 75 லட்சம் ரூபாய்) சன்மான

இருந்தபோதிலும் மூன்று தரப்பு ஆப்களிடம் சரியான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லையென்றால், ஹேக்கர்களால் சுலபமாக நமது ஆப்பிள் கணக்கினுள் நுழைந்து, நமது பல்வேறு விவரங்களைத் திருட வாய்ப்பு இருந்திருக்கிறது. இதை கடந்த ஏப்ரல் மாதம் சுட்டிக்காட்டியிருந்தார் இந்தியாவைச் சேர்ந்த டெவலப்பர் பவுக் ஜெயின் என்பவர். இதை சரிப்படுத்திகொண்ட ஆப்பிள் நிறுவனம், அவருக்கு 1லட்சம் டாலர்களை(இந்திய மதிப்பில் சுமார் 75 லட்சம் ரூபாய்) சன்மானமாக வழங்கியுள்ளது.

கசியவில்லை எனவும் ஆப்பிள்

எனவே இதனால் யாருடைய கணக்கும் பாதிக்கப்படவில்லை எனவும்,எந்த ஒரு தனிநபர் தகவலும் வெளியே கசியவில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் சார்பில் விளக்கம கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian Developer Found Bug on Apple and Got Reward by Company: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X