ஆசியாவின் நம்பர் 1., உலகளவில் நம்பர் 4- விராட் கோலிக்கு கிடைத்த அமோக வரவேற்பு!

|

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கலக்கி வருபவர் விராட் கோலி. இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது கணக்கு ஆசிய கண்டத்திலேயே 150 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று முதல் நபராக சாதனை படைத்திருக்கிறது.

உலகளவில் நான்காவது அதிக ஃபாலோவர்கள்

உலகளவில் நான்காவது அதிக ஃபாலோவர்கள்

விளையாட்டு வீரர்களில் உலகளவில் நான்காவது அதிக ஃபாலோவர்களை கொண்ட நபராக விராட் கோலி இருக்கிறார். முதல் மூன்று இடத்தில் இருக்கும் நபர்கள் குறித்து பார்க்கையில், ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோர்கள் ஆவர். அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் அதிக இன்ஸ்டா ஃபாலோவர்களை கொண்ட நபராக இவர் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு ஃபாலோவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பின்தொடர்பவர்கள்

இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பின்தொடர்பவர்கள்

இந்திய கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசிரியராக இருக்கிறார். விளையாட்டு வீரர்களில் நான்காவது அதிக விளையாட்டு வீரர்களை கொண்ட நபராக கோலி இருக்கிறார். முதல் இடத்தில் கோலி 337 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு முதல் இடத்தில் இருக்கிறார். அதேபோல் லியோனல் மெஸ்ஸி 260 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டு இரண்டாவது இடத்திலும், நெய்மர் 160 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். ஆசிய அளவில் அதிக ஃபாலோவர்களை கொண்ட முதல் நபராக இவர் இருக்கிறார்.

சமூகவலைதளங்களில் முன்னிலை

சமூகவலைதளங்களில் முன்னிலை

இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி டுவிட்டர், பேஸ்புக் போன்ற பிற சமூகவலைதளத்திலும் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். டுவிட்டரில் 43.4 மில்லியன் ஃபாலோவர்களும் பேஸ்புக்கில் 48 மில்லியனுக்கு அதிகமான பின்தொடர்பவர்களையும் கொண்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் தனது பக்கத்தில் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு ரூ.5 கோடி வசூலிப்பதாகவும், ரொனால்டோ தனது பக்கத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.11.72 கோடி வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும். இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாக இருந்து வருகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் இருக்கும்.

இன்ஸ்டாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

இன்ஸ்டாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும். இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாக இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் தலைவராக இருப்பவர் ஆடம் மொசோரி, இன்ஸ்டாகிராம் தளத்தில் இனி புகைப்படங்கள் பகிரமுடியாது என தெரிவிக்கப்பட்டாலும் அந்த பயன்பாடானது முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் தளம் வீடியோ பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயன்பாடாக மாற இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

புதிய ஐடி விதிமுறைகள்

புதிய ஐடி விதிமுறைகள்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இந்தியாவில் புதிய ஐடி விதிமுறைகளை அமல்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை

24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியல் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டது.

Best Mobiles in India

English summary
Indian cricket team captain Virat Kohli became the first Asian celebrity to reach 150 million followers on Instagram

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X