Home
News

தமிழர்களை கவரும் iPhone-ன் புது அம்சம்! iOS 17 அப்டேட்டில் இந்தியர்களுக்கு பிடித்த அதிரடி அம்சங்கள் ரெடி!

என்னதான் ஆப்பிள் நிறுவனம் உலக நாடுகளில் புகழ்பெற்று சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களை கவர நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்த வகையில், நிறுவனம் இப்போது சில பிரத்தியேகமான ஐபோன் அம்சங்களை இந்தியர்களுக்காக மட்டும் அறிமுகம் செய்யவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் iOS 17 இன் பொது பீட்டா வெர்ஷனை தற்போது வெளியிட்டுள்ளது. மற்றவர்களுக்கு முன் புதிய iOS 17 அம்சங்களை முயற்சிக்க விரும்புபவர்கள் இந்த பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து ட்ரை செய்யலாம். அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் iOS 17 புதிய அம்சங்களை வழங்குகிறது.

தமிழர்களை கவரும் iPhone-ன் புது அம்சம்! iOS 17 அப்டேட்டில் அதிரடி!

ஐபோன்களுக்கான ஆப்பிளின் சமீபத்திய அப்டேட் செப்டம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவை மையமாகக் கொண்ட பல அம்சங்களையும் நிறுவனம் சேர்த்துள்ளதாக தெரிகிறது. iOS 17 உடன், சிரி (Siri) வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் இப்போது பைளின்குலர் ஆகியுள்ளது. அதாவது, இரண்டு மொழிகளை இணைந்து புரிந்துகொள்ளும் இருமொழியாக மாறியுள்ளது.

அதாவது பயனர்கள் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி கலவையைப் பயன்படுத்தி Apple இன் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உதவியாளருடன் தொடர்பு கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், இனி இந்திய ஐபோன் பயனர்கள் iOS 17 அப்டேட் மூலம் தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம் அல்லது மராத்தி ஆகியவற்றுடன் ஆங்கிலத்தை இணைக்க அனுமதிக்கவும் ஒரு விருப்பம் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பயனர்கள் அலாரம் செட் செய்ய, டைமரை வைக்க, மெசேஜ்களை அனுப்ப, வாய்ஸ் கால்களை மேற்கொள்ள, மியூசிக்க்கை கண்ட்ரோல் செய்ய, வெதர் ரிப்போர்ட்டை சரிபார்க்க, மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கான லொகேஷனை சர்ச் செய்ய என்று பல விஷயங்களை நீங்கள் சிரி மூலம் இனி இருமொழிகளின் கலவையுடன் மேற்கொள்ளலாம்.

தமிழர்களை கவரும் iPhone-ன் புது அம்சம்! iOS 17 அப்டேட்டில் அதிரடி!

இத்துடன், இந்தியர்களுக்கான மற்றொரு பிரத்தியேகமான அம்சமாக டிரான்ஸ்லிட்ரேஷன் கீபோர்ட் அம்சத்துடன் iOS 17 வருகிறது. டிரான்ஸ்லிட்ரேஷன் என்பது டெக்ஸ்ட் அல்லது சொற்களை ஒரு எழுத்து முறை அல்லது ஸ்கிரிப்டில் இருந்து மற்றொ மொழிக்கு மாற்றும் செயல்முறையாகும். இது ஒரு மொழியில் உள்ள சொற்களின் ஒலிகளை மற்றொரு மொழியின் தொடர்புடைய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைப் பயன்படுத்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

iOS 17 ஆனது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற முக்கிய இந்திய மொழிகளில் புதிய டிரான்ஸ்லிட்ரேச்சர் கீபோர்ட் அம்சத்தை கொண்டு வருகிறது. இந்த கீபோர்ட் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசும் போது ஆங்கிலம் மற்றும் மற்றொரு மொழிக்கு இடையில் நகரும் இருமொழி பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

iOS 16 உடன், ஆப்பிள் பெங்காலி, மராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. iOS 17 உடன், ஐபோன்கள் இப்போது இந்தியாவின் முதல் பத்து மொழிகளுக்கான டிரான்ஸ்லிட்ரேச்சர் கீபோர்ட்களை ஆதரிக்கின்றன. இதுதவிர, இந்தியர்கள் விரும்பும் டூயல் சிம் அம்சத்திலும் சில புதிய அம்சங்களை இனி ஐபோன் ஆதரிக்கும்.

தமிழர்களை கவரும் iPhone-ன் புது அம்சம்! iOS 17 அப்டேட்டில் அதிரடி!

புதிய iOS 17 உடன், பயனர்கள் தங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சிம் மூலம் வரிசைப்படுத்தப்பட்ட மெசேஜ்களை இனி காணலாம். எடுத்துக்காட்டாக, பயனர்கள் பர்சனல் மற்றும் அலுவலக மெசேஜ்களிலிருந்து தனிப்பட்ட மெசேஜ்களை இனி தனித்தனியாக வரிசைப்படுத்த முடியும்.

இனி ஐபோன் பயனர்கள் ஒவ்வொரு சிம்மிற்கும் வெவ்வேறு ரிங்டோன்களை அமைக்கலாம். மேலும், ஒரு பயனர் தனது சாதனத்தில் இன்னும் சேவ் செய்யாத எண்ணிலிருந்து வாய்ஸ் கால்களை பெற்றால் அல்லது தவறவிட்டால், எந்த சிம் கார்டில் இருந்து அந்த எண்ணை மீண்டும் அழைக்கலாம் என்பதை இனி அவர்கள் தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian centric features are coming to iPhone soon this year via iOS 17 Public Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X