ஸ்டம்ப் மற்றும் பேல்ஸ்களின் விலை 24 லட்சம், மெய்யாலுமா

By Meganathan
|

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டம்புகளின் விலை சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டால்ரகளாகும், இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம், இதோடு ஸ்டம்புகளின் மேல் இருக்கும் பேல்ஸ்களின் விலை 1 லட்சம், இது உலகில் பிரபலமான ஐபேன்களை விட அதிகம் ஆகும்.

ஸ்டம்ப் மற்றும் பேல்ஸ்களின் விலை 24 லட்சம், மெய்யாலுமா

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பந்து ஸ்டம்புகளில் பட்டதும் அதில் இருக்கும் எல்ஈடி விளக்குகள் எரிந்து விடும். இது நடுவர்களுக்கு தீர்ப்பு வழங்க ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டம்புகள் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் 2013 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பயன்படுத்தப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஸ்டம்ப் மற்றும் பேல்ஸ்களின் விலை 24 லட்சம், மெய்யாலுமா

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்ற அணி வீரர்கள் வெற்றியை கொண்டாட முதலில் ஸ்டம்புகளை தான் கையில் எடுப்பர், ஆனால் இம்முறை விலை உயர்ந்த எல்ஈடி ஸ்டம்புகளை கையில் எடுக்க வீரர்களுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

ஸ்டம்ப் மற்றும் பேல்ஸ்களின் விலை 24 லட்சம், மெய்யாலுமா

இந்த தடை இந்திய கேப்டன் தோனிக்கு சற்று ஏமாற்றத்தை தந்திருக்கும் என்று தான் கூற வேண்டும், தோனி வழக்கமாக வெற்றி வெற்றி பெற்றவுடன் ஸ்டம்பை கைதான் முதலில் கையில் எடுப்பார், தடை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின், தோணி ஸ்டம்புகளை கையில் எடுத்து கொம்டாடவில்லை.

Best Mobiles in India

English summary
Indian captain MS Dhoni told he can't take stumps or bails. The International Cricket Council (ICC) has warned the players taking part in the World Cup not to take out the stumps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X