ஃபேஸ்புக்கில் பிழை : இந்தியருக்கு ரூ.10 லட்சம் வழங்கிய மார்க்.!!

Written By:

பொங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளரான ஆனந்த் பிரகாஷ் $15,000 (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) தொகையை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பரிசாக பெற்றார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பிழையை கண்டறிந்தமைக்கு மார்க் வழங்கிய பரிசு தான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கில் பிழை : இந்தியருக்கு ரூ.10 லட்சம் வழங்கிய மார்க்.!!

ஃபேஸ்புக் தளத்தில் எவ்வித தடயமும் இன்றி பயனர்களின் தகவல்கள், குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களை திருட வழி செய்யும் எளிய பிழையை தான் கண்டுபிடித்ததாக ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பிராடக்ட் செக்யூட்டி இன்ஜினியராக பணியாற்றி வரும் ஆனந்த் பிரகாஷ் தனது ப்ளாக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவை இங்கு பார்க்கலாம்.


ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சேவைகளில் பிழைகளை கண்டுபிடித்து சுமார் ரூ. 1.2 கோடி சம்பாதித்து இருப்பதாக 22 வயதான ஆனந்த் தனது ப்ளாக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்ற பின் இந்த பணியை துவங்கிய ஆனந்த் இதுவரை சுமார் ஃபேஸ்புக் சேவையில் 90 பிழைகளையும் ட்விட்டரில் 30 பிழைகளை கண்டறிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

English summary
Indian awarded 10 lakh for finding bug on Facebook Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot