கழுகுகளை வைத்து இந்திய எல்லையில் எதிரிகளை வதம் செய்கிறதா இந்திய ராணுவம்.! வேட்டை ஆரம்பம்.!

|

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் (World's most powerfull army force) கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும், பாதுகாப்பு திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய ராணுவத்திற்கு (Indian Army) மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கு. நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எதிரிகளை கட்டுக்குள் வைக்க இந்திய ராணுவம் செய்யும் பல தனித்துவமான நடவடிக்கைகள்.!

எதிரிகளை கட்டுக்குள் வைக்க இந்திய ராணுவம் செய்யும் பல தனித்துவமான நடவடிக்கைகள்.!

எதிரிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தனித்துவமாகச் சிந்திக்கும் திறனும் இந்திய ராணுவத்திடம் நிறையவே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அது தான் உண்மையும் கூட.!

அந்த வகையில் சமீபகாலமாகப் பெரிதும் பேசப்படக்கூடிய பல சாதனையை இந்திய ராணுவம் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

திறமையான மனிதர்களை தாண்டி இந்திய ராணுவத்தில் இயங்கும் 5 அறிவு வீரர்கள்.!

திறமையான மனிதர்களை தாண்டி இந்திய ராணுவத்தில் இயங்கும் 5 அறிவு வீரர்கள்.!

குறிப்பாக, திறமையான மனிதர்கள் மட்டுமின்றி மற்ற 5 அறிவு உயிரினங்களையும் இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

பொதுவாகவே உலகத்தில் இருக்கும் எல்லா உயிரினமும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்யும் மனோபாவத்தில் தான் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறது.

அப்படி மனிதனின் உற்ற தோழனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கும் நாய்கள் பல ஆண்டுகளாகவே ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்த பெஸ்ட் திட்டங்களை தான் Jio மக்கள் அதிகமா ரீசார்ஜ் செய்றாங்களா? அடேங்கப்பா.! இவ்வளவு கம்மி விலையா?இந்த பெஸ்ட் திட்டங்களை தான் Jio மக்கள் அதிகமா ரீசார்ஜ் செய்றாங்களா? அடேங்கப்பா.! இவ்வளவு கம்மி விலையா?

இந்திய எல்லையில் கழுகுகள் எதிரிகளை வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?

இந்திய எல்லையில் கழுகுகள் எதிரிகளை வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?

இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், இப்போது அந்த வரிசையில் கழுகுகளும் பருந்துகளும் இந்திய ராணுவத்தில் சேர்ந்திருக்கிறது.

இரைகளைத் துல்லியமாகக் கவனிக்கும் பார்வை திறனும் அசாத்திய சக்தியும் வேகமும் கொண்ட பருந்துகள் மற்றும் கழுகுகள் உணவுக்காக வேட்டையாடி பார்த்திருப்பீங்க - ஆனால், ராணுவத்துடன் சேர்ந்து கழுகுகள் எதிரிகளை வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?

எதிரி நாட்டு ட்ரோன்களை வேட்டையாடும் இந்திய ராணுவ கழுகுகள்.!

எதிரி நாட்டு ட்ரோன்களை வேட்டையாடும் இந்திய ராணுவ கழுகுகள்.!

இந்த அசாத்தியமான நிகழ்வை நீங்கள் இந்திய ராணுவத்தில் பார்க்க முடியும். கழுகுகள் மற்றும் பருந்துகளின் இயற்கையான வேட்டையாடும் திறமை அதிகமாக இருக்கிறது.

இதை நம்முடைய இந்திய ராணுவம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளில் சந்தேகத்திற்குரிய எதிரி நாட்டு ட்ரோன்களை இந்திய ராணுவம் இப்போது இந்த கழுகுகளை வைத்துத் தான் வேட்டையாடுகிறது.

Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?

சந்தேகமில்லாத ஸ்பைகளாக செயல்படும் கழுகுகள்.. எப்படி தெரியுமா?

சந்தேகமில்லாத ஸ்பைகளாக செயல்படும் கழுகுகள்.. எப்படி தெரியுமா?

இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வேட்டையாடுவது மட்டுமின்றி - மறுபுறம் சந்தேகமில்லாமல் எதிரிகளுடைய எல்லைகளைக் கண்காணிக்கவும் இந்த கழுகுகளை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்புங்க மக்களே.! சிறிய கேமராக்களை கழுகுடன் இணைத்து எதிரி நாட்டிற்குள் இயற்கையான ஸ்பைகளாக இந்த கழுகுகள் பறக்கவிடப்படுகின்றன என்பதே ரகசியமான உண்மையாகும்.

இந்த அசுர வேட்டை எதனால் ஆரம்பமானது தெரியுமா?

இந்த அசுர வேட்டை எதனால் ஆரம்பமானது தெரியுமா?

ஆனா இது இப்போனு இல்லைங்க, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே இந்திய ராணுவம் இந்த விஷயத்தை சைலெண்டாக செய்து வருகிறது.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லைகளில் பாகிஸ்தானால் பல அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்ததாலயும்; இந்தியாவில் எல்லைகளிலிருந்து மருந்து பொருட்களும், ஆயுதங்களும் எதிரி நாட்டு ட்ரோன்களால் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அசுர வேட்டை ஆரம்பமானது.!

9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!

மீட்கப்பட்ட கழுகுகளை வைத்து எதிரிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட இந்திய ராணுவம்.!

மீட்கப்பட்ட கழுகுகளை வைத்து எதிரிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட இந்திய ராணுவம்.!

எதிரி நாட்டு அசுரர்களை வதம் செய்வதற்காக இந்திய ராணுவம் கையில் எடுத்த ஆயுதம் தான் இந்த கருடன் குழு (Garuda Squad) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த 'கழுகு படை'.!

இந்தக் கழுகு மற்றும் பருந்து படை திட்டம் முதலில் துவங்கியது மீரட்டில் (Meerut) உள்ள ரீமவுண்ட் கால்நடை ராணுவப் படை (Remount Veterinary Corps) தளத்தில் தான்.

ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட கழுகுகள், பருந்துகள், மற்றும் ஃபால்கன் பறவைகள் தான் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

ட்ரோன் வேட்டைக்காக இந்திய கழுகு-களுக்கு வழங்கப்ட்ட ராணுவ பயிற்சிகள்.!

ட்ரோன் வேட்டைக்காக இந்திய கழுகு-களுக்கு வழங்கப்ட்ட ராணுவ பயிற்சிகள்.!

ஃபால்கன் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் (Falcon Rescue and Rehabilitation Centre) இருந்து கொண்டுவரப்பட்ட பருந்துகளுக்கு 2020ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய பறவைகளுக்கு இயற்கையாகவே உற்று நோக்கும் பார்வையும், இரையைக் குறிபார்த்து வேட்டையாடும் தன்மையும் இருக்கிறது என்பதால் இதை ட்ரோன் வேட்டைக்காக இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.

டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன் 2022: மற்ற போன்களை அடித்துவிரட்டி கெத்துக்காட்டிய 10 அசுரர்கள்.!டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன் 2022: மற்ற போன்களை அடித்துவிரட்டி கெத்துக்காட்டிய 10 அசுரர்கள்.!

பயிற்சி காலத்திலேயே இத்தனை எதிரி ட்ரோன்களை நம்முடைய கழுகுகள் வதம் செய்ததா?

பயிற்சி காலத்திலேயே இத்தனை எதிரி ட்ரோன்களை நம்முடைய கழுகுகள் வதம் செய்ததா?

ராணுவ வீரரிடம் இருந்து உத்தரவு வந்தவுடனே, இவை வானில் பறந்து சென்று, சரியாக எதிரி நாட்டு ட்ரோன்களைப் பிடித்துக் கீழே கொண்டுவந்து விடுகின்றன.

இன்னும் இந்த கழுகுகளுக்கான பயிற்சி காலமே முடியாத சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட UAV மற்றும் ட்ரோன்களை இதுவரை இந்தக் கருடன் குழு வேட்டையாடி தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட எதிரி நாட்டு ட்ரோன்களை இந்த கழுகுகள் வேட்டையாடி நமது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன.

தானாக தனது எல்லையை விரிவுப்படுத்தி தேடலில் ஈடுபடுகிறதா இந்த கழுகுகள்?

தானாக தனது எல்லையை விரிவுப்படுத்தி தேடலில் ஈடுபடுகிறதா இந்த கழுகுகள்?

வேட்டையாடி முடித்த பின்னர் மீண்டும் விண்ணிற்குச் சென்று கண்காணிப்பு வேலையை இவை ஆரம்பித்து விடுமாம்.

முதலில் குறுகிய வட்டத்தில் மட்டுமே கண்காணிப்பு பணியைச் செய்ய ஆரம்பிக்கும் இவை பழகப் பழகத் தங்களது வட்டத்தைப் பெரிது படுத்திக்கொண்டே போகும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காகவே பிரத்தியேகமாகக் கழுகு மற்றும் பருந்துகளின் நெற்றியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Apple Watch-க்கு பதிலா இனி எல்லோரும் இந்த Xiaomi Watch S2 தான் வாங்கப்போறாங்க.! ஏன் தெரியுமா?Apple Watch-க்கு பதிலா இனி எல்லோரும் இந்த Xiaomi Watch S2 தான் வாங்கப்போறாங்க.! ஏன் தெரியுமா?

ஒரு - ஒரு கழுகுக்கு தனித்தனி வீரர்கள்.! ஆர்மி கட்டளையை சரியாக கடைபிடிக்கும் பருந்துகள்.!

ஒரு - ஒரு கழுகுக்கு தனித்தனி வீரர்கள்.! ஆர்மி கட்டளையை சரியாக கடைபிடிக்கும் பருந்துகள்.!

இப்போது இருக்கும் கேமராக்கள் சாதாரண அம்சம் கொண்டவை என்றாலும் பயிற்சி முடியும்போது நவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு - ஒரு பறவைக்கும் சிறப்பான பயிற்சியைக் கொடுக்கத் தனித் தனி வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நடந்த பயிற்சியில் ஒரு பறவை கூடப் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவக் குழு தெரிவித்துள்ளது. இதை மக்களுடன் பெருமையாகப் பகிரும் விதமாகக் காணொளி ஒன்று இந்திய ராணுவத்தால் பகிரப்பட்டுள்ளது.

சிக்னல் கொடுத்தால் போதும்.! எதிரிகளை தொம்சம் செய்துவிடும்.!

சிக்னல் கொடுத்தால் போதும்.! எதிரிகளை தொம்சம் செய்துவிடும்.!

அதில் அர்ஜுன் என்று பெயரிடப்பட்ட கழுகு ஒன்று தனது பயிற்சியாளர் கையில் அமர்ந்துள்ளது.

அந்தப் பகுதியில் எதிரி நாட்டு ட்ரோன்களின் நடமாட்டத்தைக் கவனித்த ராணுவ நாய், அவர்களுக்குச் சிக்னல் கொடுத்தவுடனே அந்தக் கழுகானது - அந்த ட்ரோனை சரியாகக் குறிபார்த்துத் தாக்கி தனது பயிற்சியாளரிடம் கொண்டு சேர்க்கிறது.

இது உண்மையிலேயே நம்மை வியப்படையச் செய்கிறது.!

வேற்று பிரபஞ்சத்திலிருந்து பூமியை தாக்கிய மர்ம சக்தி.! 1000 மடங்கு பெருசு.! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்.!வேற்று பிரபஞ்சத்திலிருந்து பூமியை தாக்கிய மர்ம சக்தி.! 1000 மடங்கு பெருசு.! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்.!

இந்தியாவில் பட்டையை கிளப்பும் 'கருடன் ஸ்க்வாட்'.!

இந்தியாவில் பட்டையை கிளப்பும் 'கருடன் ஸ்க்வாட்'.!

இந்தியா ராணுவத்தின் இந்த முயற்சி இன்னும் பயிற்சி நிலையில் தான் இருக்கிறது என்றும் அவை அதிகாரப்பூர்வ ராணுவ நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராணுவப் படைகளில் கழுகுகள் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல - காரணம், 2016 ஆம் ஆண்டில் நெதர்லாந்து ராணுவத்தில் இத்தகைய "கருடன் ஸ்க்வாட்" பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Indian Army Trained Eagles And Falcons Attacks Enemy Drones At The Border

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X