குறி வச்சுட்டா 200 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தாக்குவோம்: புது வகை ஏவுகணை தயாரிப்பு?

|

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ராணுவ தளவாட கண்காட்சி நேற்று முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்

இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, எதிர்காலத்தில் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் மாநிலம் மாறும் என்று கூறினார். புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன

புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. வருகிற 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இந்தியாவில் 25 ராணுவ தளவாட உபகரணங்களை தயாரிப்பதே நமது நோக்கம் எனவும் கூறினார்.

பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறினார்

பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறினார்

அதோடு பீரங்கி துப்பாக்கிகள், விமானந்தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

பேட்ட பராக்., விர்ட்சுவல் துப்பாக்கியில் குறி வைத்து சுட்டு அசத்திய Modi: என்ன ஆனது தெரியுமா?-வீடியோபேட்ட பராக்., விர்ட்சுவல் துப்பாக்கியில் குறி வைத்து சுட்டு அசத்திய Modi: என்ன ஆனது தெரியுமா?-வீடியோ

பிரஹார் என்ற, 150 கிலோமீட்டர் தூர தாக்குதல் ஏவுகணை

பிரஹார் என்ற, 150 கிலோமீட்டர் தூர தாக்குதல் ஏவுகணை

இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ DRDO பிரஹார் என்ற, 150 கிலோமீட்டர் தூர இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணையை தயாரித்தது. இதையடுத்து டிஆர்டிஓ-விற்கு ராணுவ கூடுதல் விருப்பம் ஒன்றை தெரிவித்தது.

ராணுவ விருப்பத்தை ஏற்ற டிஆர்டிஓ

ராணுவ விருப்பத்தை ஏற்ற டிஆர்டிஓ

அதில், இன்னும் அதிக தொலைவுக்கு சென்று தாக்கும் ஏவுகணை வேண்டும் என்ற ராணுவ தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக புதிய ஏவுகணையை டிஆர்டிஓ தயாரிக்கிறது.

200 கிலோமீட்டர் தாக்கும் வகையில் ஏவுகணை

200 கிலோமீட்டர் தாக்கும் வகையில் ஏவுகணை

இந்த புது வகை ஏவுகணைக்கு பிரணாஷ் என்ற பெயரில் உருவாகிறது. இந்த ஏவுகணையானது தரையில் இருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது ராணுவம் கூடுதல் தூரம் தாக்கும் வகையில் வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் 200 கிமீட்டராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தவறி விழந்த பயணி., 1 கி.மீ., ரயிலை ரிவர்ஸ் எடுத்த ஓட்டுநர்- என்ன நடந்தது தெரியுமா?தவறி விழந்த பயணி., 1 கி.மீ., ரயிலை ரிவர்ஸ் எடுத்த ஓட்டுநர்- என்ன நடந்தது தெரியுமா?

2 ஆண்டுகளில் ஏவுகணை சோதனைக்கு வரும் என எதிர்பார்ப்பு

2 ஆண்டுகளில் ஏவுகணை சோதனைக்கு வரும் என எதிர்பார்ப்பு

இந்த ஏவுகணை அடுத்த 2 ஆண்டுகளில் சோதனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்ல பயன்படுத்த மாட்டாது. இது திட எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Indian Army to DRDO: A new type of missile is to be made in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X